Towel hygiene tips : நீங்கள் பல மாதங்களாக ஒரே டவளை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அவற்றால் என்னென்ன சரும பிரச்சனைகள் ஏற்படும் மற்றும் அதை எப்போது மாற்ற வேண்டும் என்பதை குறித்து இங்கு காணலாம்.
பல மாதங்கள் ஒரே டவல் யூஸ் பண்றிங்களா? எப்போ மாத்தனும் தெரியுமா?
பொதுவாக நாம் பயன்படுத்தும் துண்டு, உடைகள், புடவை போன்ற எந்த துணிகளையும் அது கிழியும் வரை பயன்படுத்துவோம். சிலரோ கிழிந்த துணியை தைத்து கூட பயன்படுத்துவார்கள். ஆனால், இப்படி பழைய அல்லது தைத்த துணிகளை பயன்படுத்துவது நல்லதல்ல தெரியுமா? அந்தவகையில், நீங்கள் பல மாதங்களாக ஒரே டவளை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அவற்றால் என்னென்ன சரும பிரச்சனைகள் வரும் மற்றும் அதை எப்போது மாற்ற வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.
26
காரணங்கள்:
நீங்கள் ஒரே துண்டை நீண்ட நாள் பயன்படுத்தினால் அதில் ஈரப்பதம், வியர்வை மற்றும் சருமத்தில் இருக்கும் எண்ணைகள் தங்கும். இதன் காரணமாக பாக்டீரியா மற்றும் ஊஞ்சுகள் வளரும். காலப்போக்கில் அதில் துர்நாற்றம் வீசும். பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
36
என்னென்ன சரும பிரச்சனைகள் வரும்?
ஒரே தவளை நீண்ட நாள் பயன்படுத்தினால் முதலில் ஏற்படும் சரும பிரச்சனை முகப்பருதான். ஆம் முகத்தில் பருக்கள் அதிகமாக வரும். மேலும் அதை கரும்புள்ளியாக மாறிவிடும். இன்மும் சிலருக்கு சொறி மற்றும் அரிப்பு ஏற்படும்.
நீங்கள் பயன்படுத்தும் டவளை 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை கண்டிப்பாக மாற்ற வேண்டும். சில சமயங்களில், டவலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில மாற்றங்கள் தெரிந்தால் அதை முன்கூட்டியே மாற்றுவது தான் நல்லது. அவை..
- டவளை நன்றாக துவைத்த பிறகும் அதிலிருந்து துர்நாற்றம் வீசினாலோ, பாக்டீரியா அல்லது பூஞ்சைகள் வளர்ந்திருந்தால் அந்த டவளை உடனே மாற்றி விடுவது தான் நல்லது. இல்லையெனில், உங்கள் சருமத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது முகத்தில் தடிப்புகள் முகப்பருக்கள் கூடுதலாக, கை மற்றும் கால்களில் தடுப்புகள் ஏற்படும்.
- இரண்டாவதாக அந்த டவல் கிழிந்து இருந்தால் அல்லது அதன் மென்மையை இழந்து கடினமாக இருந்தால் அதை பயன்படுத்துவது நல்லதல்ல. இல்லையெனில் சருமத்தில் தடிப்புகள் தான் ஏற்படும்.
- துண்டின் நிறம் மாறினாலோ அல்லது கறைகள் தோன்றினாலோ பாக்டீரியாக்கள் வளர்ந்துள்ளது என்று அர்த்தம். எனவே அதை பயன்படுத்தாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது.
66
டவளை சுத்தம் செய்யும் முறை:
நீங்கள் பயன்படுத்தும் டவளை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சூடான நீரில் துவைக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக வினிகரால் சுத்தம் செய்யுங்கள். துண்டை நன்றாக வெயிலில் காய்ந்த வைத்து பயன்படுத்துதல் முக்கியமாக உங்களது முகம் மற்றும் உடலுக்கு தனித்தனி துண்டுகள் பயன்படுத்துங்கள்.