
மழைக்காலம் ஆரம்பமாகி விட்டதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுத் தொடங்கும். இது தவிர டெங்கு, மலேரியா போன்ற அபாகரமான நோய்களும் மக்களை தாக்குகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த பருவகால நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றன ல்.
அதிலும் குறிப்பாக குழந்தைகளை இந்த பருவத்தில் ரொம்பவே கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம். எனினில் பெரியவர்கள் விட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் மிகவும் எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாகி விடுவார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், மழைக்காலத்தில் தொற்று நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க ஒவ்வொரு தாய்மார்களும் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்கள் இந்த பருவத்தில் எந்தவொரு நோயும் தாக்காதவாறு ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் குழந்தைங்க சருமம் வறண்டு போகுதா? பட்டுப் போல மாற பெற்றோர் செய்ய வேண்டியது இதுதான்!!
மழை காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க சில டிப்ஸ் :
1. வீட்டை சுத்தமாக வை
வீட்டை சுத்தமாக வைப்பது ஒவ்வொருவரின் கடமை. எனவே இந்த அழகானத்தில் வீட்டை சுத்தமாக வைப்பது மூலம் உங்கள் குழந்தையை தொற்று நோயிலிருந்து சுலபமாக பாதுகாக்கலாம். அதுபோல வீட்டு மொட்டை மாடியில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனுக்குடன் அகற்றி விடுங்கள்.
2. மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்
வீட்டு மொட்டை மாடி உட்பட்ட வீட்டை சுத்தி உள்ள பகுதிகளில் எங்கும் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கான வழி தடங்களையும் அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். அதுபோல குழந்தைகளுக்கு மின்சார உபகரணங்கள் எட்டாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
3. பாலூட்டும் தாய்மார்களின் கவனத்திற்கு
மழைக்காலத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் சுத்தமாக இருந்தால் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கப்படுவார்கள். அதுபோல பாலூட்டும் தாய்மார்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். இதன் மூலம் தாய்ப்பால் ஊறுவது அதிகரிக்கும். மேலும் குழந்தைகளுக்கு அவ்வப்போது தாய்ப்பால் ஊட்ட வேண்டும். இதன் மூலம் குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுபோல குழந்தைகளுக்கு எப்போதுமே புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே கொடுக்க வேண்டும்.
4. கொசு விரட்டி கொசு வலை பயன்படுத்தவும்
மழைக்காலத்தில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். மேலும் இதனால் நோய் தொற்றுகள் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க கொசு விரட்டி மற்றும் கொசுவலைகளை பயன்படுத்த மறக்காதீர்கள்.
5. ஆரம்ப அறிகுறிகளை உடனே சரி செய்
மழைக்காலத்தில் தொற்று நோய் ஏற்பட்டால் அவற்றை ஆரம்பத்திலேயே சரி செய்து விடுங்கள். உதாரணமாக சளி இருமல் காய்ச்சல் போன்றவை ஆகும்.
6. அடிக்கடி டயப்பர் மாற்றவும்
மழைக்காலத்தில் ஈரமான டையப்பர் பயன்படுத்தினால், குழந்தையின் சருமத்தில் சொறி, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இது தவிர பிற தொற்றுகளும் ஏற்படும் எனவே இவற்றை தடுக்க அடிக்கடி டயப்பர் மாற்றுங்கள்.
7. மழைக்கால ஆடை
மழைக்காலத்தில் பருத்தி மற்றும் கம்பளி ஆடை போன்ற மழைக்கால ஆடைகளை குழந்தைகளுக்கு அணிய வேண்டும் .இவை குளிரிலிருந்து குழந்தைகளை காக்கும்.
இதையும் படிங்க: குழந்தைக்கு பால் எதுக்குங்க; எலும்புகளை உறுதியாக்கும் இந்த '5' உணவுகளை கொடுங்க!!