PAN-D, Shelcal 500 உள்ளிட்ட 71 மருந்துகள் தரமற்றவை! நீங்களும் இதை சாப்பிடுறீங்களா?

First Published | Oct 28, 2024, 1:56 PM IST

பான் டி மற்றும் ஷெல்கால் 500 உட்பட 71 மருந்துகளை CDSCO தரமற்றவை என்று அறிவித்துள்ளது. ஆண்டிபயாடிக், இருமல் மருந்துகள், நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த மாத்திரைகள் போன்ற மருந்துகளும் இதில் அடங்கும்.

Drugs fail quality test

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation - CDSCO) பொதுவாகப் பயன்படுத்தப்படும் பான் டி மற்றும் ஷெல்கால் 500 உட்பட 71 மருந்துகளை "மோசமானவை" அல்லது தரமற்றவை என்று அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் ஆண்டி பயாடிக் மருந்துகள், இருமல் சிரப்கள், நீரிழிவு மருந்துகள் மற்றும் இரத்த அழுத்த மாத்திரைகள் போன்ற மருந்துகளும் அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இருமல் சிரப்கள், பாராசிட்டமால், அழற்சி எதிர்ப்பு கண் சொட்டுகள், கால்சியம் மற்றும் வைட்டமின் டி 3 சப்ளிமெண்ட்ஸ், நீரிழிவு எதிர்ப்பு மாத்திரைகள் மற்றும் இரத்த அழுத்த மருந்துகள் ஆகியவற்றில் உள்ள சிக்கல்களையும் எடுத்துக்காட்டுகிறது.

Drugs fail quality test

போலி மருந்துகள்

பொதுவான இரைப்பை மருந்து, புற்றுநோய் அல்லாத புரோஸ்டேட் விரிவாக்கத்திற்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்து, எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமான உணவுப் பொருள் மற்றும் மாதவிடாய் நின்ற பிறகு இரத்த சோகை மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகியவற்றிற்கு பெண்கள் பயன்படுத்தும் மருந்துகளை தரமற்றவை என்பதும் கண்டறிந்தது. 

மேலும் சில மருந்துகளும் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை

PAN-D: Pantoprazole Gastro-Resistant மற்றும் Domperidone மாத்திரைகள், பொதுவாக அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் பிற இரைப்பை பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

Urimax-D: புற்றுநோய் அல்லாத புரோஸ்டேட் விரிவாக்கத்தை நிர்வகிக்கப் பயன்படுகிறது.

மீனோட சுவை அடிக்கடி சாப்பிட தூண்டும்.. ஆனா 'இந்த' நேரத்துல சாப்பிட்டா ஆபத்து மட்டும் தான்!!

Tap to resize

Drugs fail quality test

Shelcal 500: கால்சியம் மற்றும் வைட்டமின் டி3 மாத்திரைகள், எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கியமான உணவுப்பொருள்.

Nandrolone Decanoate Injection IP 25 mg/ml (Deca-Durabolin 25 Inj.), மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை மற்றும் ஆஸ்டியோபோரோசிஸைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

உற்பத்தியாளர்கள் கேள்விக்குரிய தொகுதிகளை உற்பத்தி செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர், இந்த மருந்துகள் போலியானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத் தரநிலைகளை பூர்த்தி செய்யத் தவறியதால், 67 மருந்துகள் தரமற்றவை என்று சிடிஎஸ்சிஓ அடையாளம் கண்டுள்ளது.

Drugs fail quality test

தரமற்றவை என்று கண்டறியப்பட்ட மருந்துகள் என்னென்ன?

Metronidazole, Cefuroxime Axetil, Ceftriaxone, Ciprofloxacin போன்ற ஆண்டி பயாடிங் மருந்துகள் போலியானவை
Metformin & Glimepiride, Glipizide போன்ற நீரிழிவு நோய்க்கான மருந்துகள் போலி என்பது கண்டறியப்பட்டுள்ளது. 
Diclofenac Sodium மற்றும் Aceclofenac & Paracetamol ஆகிய மருந்துகளும் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
Ramipril and Telmisartan பொன்ற இதயம்/இரத்த அழுத்த மருந்துகள் தரமற்றவை.

சர்க்கரை நோய்  கட்டுக்குள் வர.. ஈஸியான வழி இருக்கு.. 'இப்படி'  வாக்கிங் போனா போதும்!!

Drugs fail quality test

Omeprazole & Domperidone and Pantoprazole போன்ற இரைப்பை குடல் மருந்துகளும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. 
Calcium Gluconate, Calcium & Vitamin D3, and Methylcobalamin போன்ற வைட்டமின்/மினரல் சப்ளிமெண்ட்ஸ ஊசிகள் என்பது தெரியவந்துள்ளது. Dextromethorphan & Chlorpheniramine Syrup, Fexofenadine மற்றும் Cetirizine Dihydrochlorideஇருமல்/சளி/ஒவ்வாமை மருந்துகள்: ஆகியவை தரமற்றவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை தவிர மேலும் சில மருந்துகளும் தரமற்றவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!