
நாம் ஒவ்வொருவரும் சமையல் அறையில் முதல் வீட்டின் அனைத்து பொருட்களையும் அவ்வப்போது சுத்தம் செய்வோம். என் வீட்டை கூட அடிக்கடி மாப் போடுவோம். ஆனால் வீட்டில் இருக்கும் மிதியடியை நம்மில் பெரும்பாலானோர் சுத்தம் செய்வதே இல்லை. ரெண்டு மூன்று மாதங்கள் ஆனாலும் சரி அதை சுவற்றில் தட்டி மீண்டும் பயன்படுத்துவோர் பலர். இன்னும் சிலரோ வருடத்திற்கு ஒன்று என்ற கணக்கில் ஒவ்வொரு வருடமும் பழையதை தூக்கி வாங்கி, புது மிதியடி வாங்கி பயன்படுத்துவார்கள்.
மேலும் நாம் நம்முடைய வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்தாலும் மிதியடியை சுத்தமாக வைக்கவில்லை என்றால் எல்லாம் வேஸ்ட் தான்.
அதுபோல சிலர் மிதியடியை பிரஷ் போட்டு ரொம்பவே கஷ்டப்பட்டு துவைப்பார்கள். ஆனால் இனிமேல் எந்த கஷ்டமும் இல்லாமல் 10 நிமிடத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் மிதியடியை மிகவும் எளிதாக துவைக்கலாம் தெரியுமா? அதுவும் எந்தவித அழுக்கும் கறைகளும் இல்லாமல். எனவே, இப்போது உங்கள் வீட்டில் இருக்கும் மிதியடியை ரொம்பவே சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதியடியை சுலபமாக சுத்தம் செய்ய டிப்ஸ்:
இதற்கு முதலில் ஒரு அகலமான வாளியில் சூடான தண்ணீரை அதில் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதில் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து மிதியையும் போட்டு, தண்ணீருக்குள் மூழ்குமாறு வைக்கவும். சுமார் அரை மணி நேரம் மிதியடியை சூடான தண்ணீரில் அப்படியே ஊற வைக்கவும். பிறகு அதிலிருந்து எடுத்து சாதாரண தண்ணீரில் நன்கு அலசுங்கள். இப்படி செய்வதன் மூலம் மிதியடியில் இருக்கும் பாதி அளவு அழுக்குகள் நீங்கிவிடும்.
இதையும் படிங்க: தரையை துடைச்ச அப்பறம் 'மாப்' அழுக்கா மாறிடுதா? ஈஸியா மாப்பை கிளீன் பண்ண டிப்ஸ்!!
இதனை அடுத்ததாக அதே வாளியில் மீண்டும் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக் கொள்ளுங்கள் பிறகு அதில் 2 ஸ்பூன் டிடர்ஜென்ட் பவுடர், வினிகர் அல்லது பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். தண்ணீர் சூடானது என்பதால் கைகளை பயன்படுத்த வேண்டாம். ஒரு பெரிய கட்டை பயன்படுத்தவும். பின் அதில் மூன்று முடி டெட்டால் ஊற்றவும்.
டெட்டால் கிருமி நாசினி என்பதால் மிதியடியில் இருக்கும் கிருமிகளை மிகவும் எளிதாக அது நீக்கிவிடும். அதன் பிறகு மிதியடியை அதில் சுமார் ஒரு மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து ஒவ்வொரு மிடியடியையும் சாதாரண தண்ணீரில் நன்கு அலசி வெயிலில் காய வைத்து பயன்படுத்தவும்.
இந்த முறையை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் உங்கள் மிதியடி கைவலிக்காமல் சுலபமாக துவைத்து விடலாம். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் நீங்களும் உங்களது வீட்டில் இருக்கும் மிதியடியை ஒரு முறை இப்படி துவைத்து பாருங்கள்!
குறிப்பு : உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வாரம் ஒரு முறையாவது உங்கள் வீட்டில் இருக்கும் மிதியடியை கண்டிப்பாக துவையுங்கள்.
இதையும் படிங்க: போர்வையில் வீசும் கெட்ட வாசனை.. 'இப்படி' ஈஸியா சுத்தம் செய்ங்க!!