Ear Pain For Kids In Tamil
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு சளி, இரும்பல், காய்ச்சல் போன்ற பல நோய்கள் வருவது வழக்கம். இதனுடன் கூடவே காது வலியும் வரும். இதற்கு முக்கிய காரணம் குளிர்காலத்தில் வீசும் காற்று தான். இது தவிர, சுற்றுச்சூழலில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் குழந்தைகளுக்கு காது வலியை ஏற்படுத்துகிறது.
Ear Pain For Kids In Tamil
அதுமட்டுமின்றி, பெரியவர்களை விட குழந்தைகள் தான் காது வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம் நோய் எதிர்ப்பு அமைப்பு தான். குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு சளி, தும்மல், இருமல், ஜலதோஷம் போன்றவை ஏற்பட்டால் கூட காது வலி வந்துவிடும். அதுவும் அவர்கள் தூம்பும் போதோ அல்லது இரும்பும் போதோ அவர்கள் காதில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் காதில் மோசமான வலியை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த காது வலியால் தூங்குவதில் சிரமம் மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அதிலிருந்து விடுபட சில பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: 10 வயதுக்குள் உங்க குழந்தைக்கு கட்டாயம் 'இதை' கற்று கொடுங்க!!
Ear Pain For Kids In Tamil
குளிர்காலத்தில் குழந்தைகள் காது வலியில் இருந்து விடுபட சில தடுப்பு நடவடிக்கைகள்:
1. உங்கள் குழந்தைக்கு காது வலி ஏற்பட்டால் 10 முதல் 15 நிமிடங்கள் வரை காதை சுற்றி சூடான ஒத்தடம் கொடுங்கள். இது வலியை குறைக்கும்.
2. உங்கள் பிள்ளைக்கு காது வலியுடன் கூட காய்ச்சலும் இருந்தால் மருத்துவ பரிந்துரைத்த மருந்தை கொடுக்கலாம்.
3. காது வலியின் போது உங்கள் குழந்தைக்கு நிறைய தண்ணீர் குடிக்க கொடுங்கள் இதை செய்வதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: குள்ளமாக இருக்கும் குழந்தைகள்.. சீக்கிரமே 'உயரமாக' வளர உதவும் '5' சூப்பர் உணவுகள்!!
Ear Pain For Kids In Tamil
நினைவில் கொள்:
- குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு குளிர்ச்சி ஏற்படுவதை தடுக்க அடுக்கான ஆடைகளை அணிவிக்கவும். ஆனால் அளவுக்கு அதிகமாக அணிய வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- குளிர்காலத்தில் குழந்தைகளின் காதுகளை எப்போதுமே மூடி வைக்கவும்.
- குழந்தைகளுக்கு லேசாக வலி இருக்கும் போது காதில் பஞ்சு போன்ற எதையும் வைத்து குடைய வேண்டாம். இது வலியை மேலும் அதிகரிக்கும்.
- குளிர்காலத்தில் குழந்தைகளை குளிப்பாட்டும் போது அவர்களது காதுக்குள் நீர் போகாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை காதில் நீர் சென்றால் அது வலியை ஏற்படுத்தும். அது போல குழந்தைகளை குளிர்காலத்தில் குளிப்பாட்டிய பிறகு உடனே ஒரு டவளால் நன்கு துடைத்து விடுங்கள்.
- குழந்தைகளுக்கு பழங்கள் காய்கறிகள் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் அவற்றை அதிகமாக கொடுக்கலாம்.
- முக்கியமாக குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் முன் அணிவிக்கவும்.