
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமாக வாழ்வது பெரும் சவாலானது என்று சொல்லலாம். ஆரோக்கியமாக வாழ பலர் உடற்பயிற்சி செய்கிறார்கள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் பாலும் வாழைப்பழமும். இவை இரண்டிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
பொதுவாகவே பெரும்பாலானோர் காலை உணவில் பாலை மற்றும் வாழைப்பழத்தை தனித்தனியாக சாப்பிடுவார்கள். ஆனால் இரவில் பாலையும் வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் ஆண்களுக்கு பல அதிசயங்கள் நடக்கும் தெரியுமா?
இதை இரண்டு கலவையானது ஆண்களுக்கு பல உடல் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். அந்த வகையில் பால் மற்றும் வாழைப்பழம் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு எப்படி நன்மை பயக்கும்? என்னென்ன சத்துக்கள் கிடைக்கும்? எந்த மாதிரியான பிரச்சனைகள் தீரும்? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: ஒவ்வொரு ஆண்களும் இந்த 5 விஷயங்களை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க.. ஹெல்தியா இருப்பீங்க!!
வாழைப்பழம் & பாலில் இருக்கும் சத்துக்கள்:
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், போலிக் அமிலம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுபோல வைட்டமின் ஏ, வைட்டமின் டி, புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் பாலில் உள்ளன இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: ஆண்களே.. நீங்க இளமையாக இருக்க ஆசைப்படுறீங்களா? அப்ப முதல்ல 'இத' படிங்க..
இரவில் வாழைப்பழம் & பால் சேர்த்து சாப்பிடுவதால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:
ஆற்றலை அதிகரிக்கும்:
எப்போதுமே பலவீனமாக மற்றும் சோர்வாக இருக்கும் ஆண்கள், இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன் பால் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும் மற்றும் உடல் பலவீன பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.
இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்:
பால் மற்றும் வாழைப்பழத்தை இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஆண்கள் சாப்பிட்டால் அவர்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. குறிப்பாக இவை ஆண்களின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். எப்படியெனில், பால் மற்றும் வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது BP நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது.
உடல் மெலிந்திருப்பவர்களுக்கு நல்லது:
சில ஆண்கள் ரொம்பவே உடல் மெலிந்து இருப்பார்கள் அப்படிப்பட்டவர்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன் பால் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் அவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதை தொடர்ந்து அவர்கள் சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் எடை அதிகரிக்கும். இதற்கு வாழைப்பழம் தேன் மற்றும் உலர் பழங்களை ஒரு கிளாஸ் பாலில் சேர்த்து குடிக்கவும்.
வயிற்றுக்கு நன்மை:
ஆண்களே உங்களது வயிற்றை ஆரோக்கியமாக வைக்க பால் மற்றும் வாழைப்பழம் உங்களுக்கு உதவும். ஏனெனில் இவை இரண்டில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே நீங்கள் இரவில் பால் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு வாயு, மலச்சிக்கல், அமலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனே நிவாரணம் கிடைக்கும்.
நல்ல தூக்கம் வரும்:
மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் பல ஆண்கள் இரவில் சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இனிமேல் தூங்க செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் பால் மற்றும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்களைத் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் மற்றும் நீங்கள் நிம்மதியாக தூங்குவீர்கள்.