போர்வையில் இருந்து வரும் கெட்ட நாற்றத்தை போக்க சில டிப்ஸ்:
பொதுவாகவே குளிர்காலத்தில் போர்வைகள், கம்பளை ஆடைகளில் துர்நாற்றம் வீசுவது பெரிய விஷயம் அல்ல. ஆனால் சில விஷயங்களை முன்கூட்டியே கவனித்தால் துர்நாற்றம் பிரச்சனையை பெருமளவில் அகற்றி விடலாம் இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்..
1. இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் போர்வை மற்றும் கம்பளை ஆடைகளை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் போர்வையில் இருக்கும் ஈரப்பதம் நீங்கும் மற்றும் துர்நாற்றமும் அடிக்காது.
2. போர்வையில் துர்நாற்றம் வீசுவதற்கு ஒரு காரணம் என்னவென்றால், சிலர் கை, கால்களை கழுவி பிறகு படுக்கையில் அப்படியே வந்து விடுவார்கள். ஆனால் இந்த பழக்கத்தால், ஈரப்பதம் காரணமாக போர்வையில் துர்நாற்றம் அடிக்கும். எனவே நீங்கள் கை, கால்களில் ஈரம் ஏதுமில்லாமல் பிறகு போர்வையை பயன்படுத்துங்கள்.
3. அதுபோல நீங்கள் குளிர்காலத்தில் உங்களது படுக்கையில் உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.