
அவசர உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் உணவு பழக்கங்கள் மாறிவிட்டன. துரித உணவுகள் பலரின் வாழ்வில் ஒரு பகுதியாகிவிட்டது. இதனால் பல நோய்கள் ஏற்படுகின்றன. இந்த சூழலில் நாம் கருஞ்சீரகம் அல்லது கலோஞ்சி (Nigella seeds) குறித்து தெரிந்து கொள்ளவேண்டும். இந்த மூலிகை ஊட்டச்சத்து அதிகம் கொண்டுள்ளது. சக்திவாய்ந்த மூலிகையாகும். சோடியம், கால்சியம், இரும்பு ஆகிய தாதுக்கள் அதிகம் காணப்படும் கருஞ்சீரகத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க கூடிய பண்புகள் உள்ளன.
இதில் கார்போஹைட்ரேட்டுகள், பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவையும் உள்ளன. பல்வேறு வைட்டமின்கள் காணப்படும் இதன் எண்ணெயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் உள்ளன. இதில் காணப்படும் பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் பண்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தோடு தொடர்புடையது.
இதையும் படிங்க: கஷ்டப்படாம சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டணுமா? அப்ப தினமும் இந்த விதைய கொஞ்சம் வாயில போடுங்க! நம்ப முடியாத பலன்கள்
புற்றுநோய் தடுப்பு:
கருஞ்சீரக எண்ணெய் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறனைக் கொண்டுள்ளது. இந்த எண்ணெய்யை உட்கொள்வதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க வாய்ப்புகள் உள்ளன. புற்றுநோயாளிகளுடைய ஆரோக்கியமான செல்களை இந்த எண்ணெய் சேதமடையாமல் பாதுகாக்கிறது. ஒரு டம்ளர் திராட்சை சாறுடன், அரை டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு நாளுக்கு 3 முறை எடுத்து கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: கெட்ட கொழுப்பை மளமளவென கரைக்கும் கருஞ்சீரகம்.. எப்படி சாப்பிடனும் தெரியுமா..?
இருமல்& ஆஸ்துமா:
சிலருக்கு நாள்பட்ட இருமல் தொல்லை இருக்கும். அவர்களுக்கும், ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களுக்கும் கருஞ்சீரக எண்ணெய் நிவாரணம் அளிக்கக் கூடியது. சூடான கருஞ்சீரக எண்ணெயை வைத்து மார்பு, முதுகு பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். இது நெரிசலைக் குறைத்து நல்ல சுவாசத்திற்கு உதவுகிறது.
சர்க்கரை நோய் மேலாண்மை:
கருஞ்சீரக எண்ணெய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவுகிறது. கருஞ்சீரகத்தை பால் சேர்க்காத ப்ளாக் டீயில் கலந்து குடிக்கலாம். கடுகு விதைகள், கருஞ்சீரகம், உலர வைத்த மாதுளை தோல் ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து அதில் டீ தயார் செய்து குடிக்கலாம்.
சிறுநீரக கற்கள்:
சிறுநீரகக் கற்கள் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் அரைத்த கருஞ்சீரகத்துடன், தேன் கலந்து சாப்பிட்டால் நல்லது. இந்த பேஸ்டுடன் இரண்டு டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய், மிதமான சூடுள்ள நீரை சேர்த்து நாள்தோறும் காலை உணவுக்கு முன்பு குடிக்கலாம்.
இதய நோய்& இரத்த அழுத்தம்:
பல்வேறு காரணங்களுக்காக ஏற்படும் இதய நோய், இரத்த அழுத்த பிரச்சினைகளை கருஞ்சீரக எண்ணெய் தீர்த்து வைக்கிறது. இந்த எண்ணெய் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். தேநீர் அல்லது காபி அல்லது சூப் போன்ற எந்தவொரு சூடான பானத்திலும் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெயைச் சேர்ப்பது நல்லது. இந்த எண்ணெயை கொண்டு உடலில் மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் உடல் இலகுவாகும். மன அழுத்தம் குறையும். இரத்த அழுத்தமும் குறையும் வாய்ப்புள்ளது.