
செம்பருத்தி பூவில் ஏராளமான சத்துகள் உள்ளன. இந்தப் பூக்கள் உடலுக்கு தேவையான அபார சத்துக்களை வாரி வழங்கும். செம்பருத்தியை ஜூஸ் ஆக தயார் செய்தும் குடிக்கலாம். அதற்கு செம்பருத்திப் பூக்களை நிழலில் காய வைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம். இதனை தயார் செய்வதும் எளிது தான்.
செம்பருத்தி பூக்களை கொண்டு தேநீர் தயார் செய்ய தேவையான அளவு டீத்தூள், ஏலக்காய், புதினா, இஞ்சி போன்றவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடுங்கள். இந்த தேநீர் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஒரு பூவுடன் தேயிலை தூளை சேர்ப்பது தனித்துவமான சுவையை தரும். இப்படி குடிப்பதால் கிடைக்கும் பலன்களை இங்கு காணலாம்.
இதையும் படிங்க: நீரிழிவு நோயாளிகள் செம்பருத்தி டீ குடிக்கலாமா? நயன்தாரா பதிவும் டாக்டரின் எதிர்வினையும்
நன்மைகள்:
செம்பருத்தி டீயில் மேம்படுத்தப்பட்ட ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. டீத்தூள், செம்பருத்தி இரண்டிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளன. இதனால் செல் சேதத்திலிருந்து பாதுகாக்க முடிகிறது. செல் வீக்கத்தைக் குறைக்கவும் இந்த டீ உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த டீ உதவுகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்க செம்பருத்தி டீ உதவும். கொழுப்புகளை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
செம்பருத்தியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தேநீரின் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை நிறைவு செய்யும். இதனால் வீக்கத்தைக் குறையும். தேநீரில் உள்ள கேட்டசின்கள், செம்பருத்தியில் காணப்படும் வைட்டமின்கள், தாதுக்கள் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
உடலில் உள்ள நச்சுக்களை நீக்க கல்லீரல் உதவுகிறது. அது சரியாக செயல்படாவிட்டால் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் சேர தொடங்கும். செம்பருத்தி டீ குடிக்கத் தொடங்கினால் அதில் உள்ள ஹெபடோப்ரோடெக்டிவ் பண்புகள் நச்சுகள் மூலமாக சேதமடைவதில் இருந்து கல்லீரலைப் பாதுகாக்கிறது.
இந்த தேநீர் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. செம்பருத்தியில் உள்ள நார்ச்சத்து, தேநீரின் பாலிபினால்கள் செரிமானத்திற்கு உதவும். குடல் அழற்சியைக் குறைத்துவிடும்.
இதையும் படிங்க: செம்பருத்தி பூ பரிகாரம்: நிதி நெருக்கடி தீர; மன நிம்மதி கிடைக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!
வித்தியாசமான செம்பருத்தி தேநீர் ரெசிபிகள்:
செம்பருத்தி மசாலா டீ:
செம்பருத்தி பூக்கள், தேயிலை தூள், இலவங்கப்பட்டை, இஞ்சி, ஏலக்காய் போட்டு டீ தயார் செய்து குடிக்கலாம்.
செம்பருத்தி, அன்னாசி டீ:
செம்பருத்தி பூக்கள், தேயிலை தூள், அன்னாசிப்பழம், போன்றவை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கிய பின் தேங்காய் துருவல் போட்டு குடிக்கலாம்.
செம்பருத்தி, லெமன் டீ:
செம்பருத்தி பூக்களை நீரில் நன்கு கொதிக்க விட வேண்டும். அதன் நிறம் கருஊதாவாக மாறிய பின் இறக்கி அத்துடன் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும். இப்போது அதன் நிறம் செம்பருத்திபூ நிறமாக இருக்கும். அதை பருகலாம்.
இந்த செம்பருத்தி டீயை யார் குடிக்கக் கூடாது?
கருத்தரித்த பெண்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் சுகாதார நிபுணரிடம் கலந்தாலோசித்து விட்டு குடிக்கலாம். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் தகுந்த ஆலோசனையின்றி எடுக்கக் கூடாது. ஒவ்வாமை கோளாறு உள்ளவர்கள் முதலில் சிறிய அளவில் குடிக்க தொடங்கலாம்.