Parenting Tips In Tamil
வாழ்க்கையை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினால் நம்மிடம் சில வாழ்க்கை திறன்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தை சிறிதாக இருப்பதால் அவர்களுக்கு ஏன் வாழ்க்கைத் திறன் தேவை, அவர்கள் வளர்ந்து கற்றுக் கொள்ளட்டும் என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.
Parenting Tips In Tamil
குழந்தைகள் நீங்கள் நினைப்பதை விட அவர்கள் அதிகம் கற்றுக் கொள்ளும் திறன் கொண்டவர்கள். சிறுவயதில்தான் நீங்கள் உங்களது குழந்தைக்கு நல்ல பழக்கங்களை சொல்லி வளர்க்க முடியும். நீங்கள் அவர்களை எப்படி வளர்க்கிறீர்களோ அவர்கள் அதன்படி நடந்து கொள்வார்கள். குழந்தைகள் வளர்ந்த பிறகு எந்த ஒரு புதிய விஷயத்தையும் கற்றுக் கொள்வது அல்லது ஏற்றுக் கொள்வது அவர்களுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும்.
அந்த வகையில் உங்களது பிள்ளைகளும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் வெற்றி பெறவும் நீங்கள் விரும்பினால், சில வாழ்க்கை திறன்களை அவர்களது 10 வயதுக்குள் கண்டிப்பாக சொல்லிக் கொடுங்கள். அது என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: அக்கறையான பெற்றோர் 'இதை' பண்ணமாட்டாங்க.. பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் ஏன் வாங்கக் கூடாது தெரியுமா?
Parenting Tips In Tamil
10 வயதிற்குள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய வாழ்க்கை திறன்கள்:
தொடர்பு திறன்
குழந்தைகளுக்கு அவர்களது கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தவும், கேட்கவும் மற்றும் அவர்களது உணர்வுகளை திறம்பட வெளிப்படுத்தவும் கற்றுக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
சிக்கல் தீர்ப்பது
குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப சில சவால்கள் மற்றும் புதிர்களை அவர்களுக்கு முன் வைக்கவும். இதன் மூலம் அவர்கள் சிக்கலை தீர்க்கும் திறனை வளர்த்துக் கொள்வார்கள். இப்படி செய்வதன் மூலம் வளர்ந்த பிறகு அவர்கள் சிக்கல்களை சுலபமாக எதிர்கொள்வார்கள்.
Parenting Tips In Tamil
தோல்வியில் பாடம்
வாழ்க்கையில் சில தோல்விகள் வருவது சகஜம் என்றும், தோல்வி என்பது வாழ்க்கை ஒரு பகுதி தான் என்றும் உங்களது குழந்தைக்கு புரிய வையுங்கள் மற்றும் அவர்கள் புரிந்து கொள்ள நீங்கள் உதவுங்கள். தோல்வியிலிருந்து குழந்தைகள் மீள்வது மற்றும் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வது எப்படி என்பதை அவர்களுக்கு நீங்கள் சொல்லிக் கொடுங்கள்.
பொறுப்பு
வயதிற்கு ஏற்ப உங்களது குழந்தைகளுக்கு பொறுப்புகளை கற்றுக் கொடுங்கள். அதாவது அவர்களது உடைமைகளை எவ்வாறு கவனித்துக் கொள்வது, பணிகளை எப்படி முடிப்பது கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது போன்ற விஷயங்களை கற்பிக்கவும்.
அனுதாபம்
உங்களது குழந்தையை மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் கருத்தில் கொள்ளவும் அவர்களை ஊக்குவிக்கவும். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் பட்சபாதமின்றி கருணையுடன் வளர்வார்கள். இது அவர்களது வாழ்க்கை மேம்படுத்து உதவும்.
இதையும் படிங்க: குள்ளமாக இருக்கும் குழந்தைகள்.. சீக்கிரமே 'உயரமாக' வளர உதவும் '5' சூப்பர் உணவுகள்!!
Parenting Tips In Tamil
டைம் டேபிள்
வெற்றிகரமான வாழ்க்கைக்கு நேரத்தை நிர்வகிப்பது மிகவும் அவசியம். இதை உங்களது குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள். இதற்கு உங்கள் குழந்தை ஒரு டைம் டேபிள் உருவாக்கு சொல்லுங்கள். அதில் உங்கள் குழந்தை என்ன பணிகளை செய்ய வேண்டும், எவ்வளவு நேரத்தில் செய்ய வேண்டும் என்று எழுத சொல்லவும். ஆரம்பத்தில் அவர்களால் செய்ய முடியாவிட்டால் போகப்போக கற்றுக் கொள்வார்கள்.
நிதி அறிவு
பணத்தை சேமிப்பது மற்றும் செலவு செய்வது ஆகியவற்றின் அடிப்படையில் உங்களது குழந்தைக்கு கற்றுக் கொடுங்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் கடினமான காலத்தில் கூட எந்த பிரச்சனையும் இல்லாமல் அதில் இருந்து வெளிவருவார்கள். இதற்காக உங்களுக்கு குழந்தைக்கு நீங்கள் ஒரு உண்டியல் வாங்கி கொடுத்து அதில் கொஞ்சம் பணம் சேர்க்கச் சொல்லுங்கள். மூலம் அவர்கள் பணத்தின் முக்கியத்துவத்தையும் அதை எப்படி நிர்வகிப்பது என்பதையும் கற்றுக் கொள்வார்கள்.