சமையலறையில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று இஞ்சி. இஞ்சியை உணவுகள் மட்டுமின்றி, பலரும் தேநீரில் போட்டு குடிக்க விரும்புவார்கள். அதுவும் குறிப்பாக குளிர்காலம் தொடங்கியவுடன் பலரது வீட்டில் இஞ்சியின் பயன்பாடு அதிகமாகவே இருக்கும்.
26
Ginger Store Tips In Tamil
ஆனால், சில நேரங்களில் இஞ்சி ஓரிரு நாட்களில் கெட்டுப் போய்விடும். இதற்கு அதை வைத்திருக்கும் அல்லது சேமிக்கும் முறை தவறாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் இந்த பதிவில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் மட்டும் போதும் இஞ்சி ஒரு மாதம் ஆனாலும் கூட கெட்டுப் போகாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். அது எப்படி என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க..
36
Ginger Store Tips In Tamil
இஞ்சி வாங்கும் முன் இதை கவனி!
இஞ்சி நீண்ட நாள் கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாக இருக்க, நீங்கள் இஞ்சி வாங்கும் போது அது காய்ந்து அல்லது ஈரமாக இருக்கக்கூடாது. எப்போதுமே புதிதாக தான் இருக்கும் இஞ்சியை மட்டுமே வாங்குங்கள்.
46
Ginger Store Tips In Tamil
ஃப்ரிட்ஜில் இஞ்சியை சேமிப்பது எப்படி?
புதிதாக வாங்கிய இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்கலாம். ஆனால் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் இஞ்சி நீண்ட நாள் கெடாமல் இருக்க அதை காற்று போகாத ஒரு டப்பாவில் அல்லது ஒரு ஜிப் லாக் பையில் தோல் உரிக்காமல் அப்படியே போட்டு வைக்க வேண்டும். அப்போதுதான் இஞ்சி நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்.
தோல் உரித்த இஞ்சியை சேமிக்க அதை பேக்கிங் தாளில் வைத்து சிறிது நேரம் அப்படியே உறைய வைக்க வேண்டும். பிறகு அந்த இஞ்சியை காற்று பூக்காத ஒரு டப்பாவில் வைத்து ஜெபிக்கலாம்.
இஞ்சியை நீங்கள் கவரில் சேமிக்க விரும்பினால் முதலில் இஞ்சியை நன்கு கழுவி அதில் ஈரம் இல்லாத படி நன்கு காற்றில் காய வைக்கவும். வேண்டுமானால் ஒரு பருத்தி துணியால் துடைக்கவும். பிறகு அதை கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்கலாம்.