சுவரில் இருக்கும் எண்ணெய் கறையை "1" நிமிஷத்தில் அகற்றலாம்! எப்படி தெரியுமா?

First Published | Nov 20, 2023, 11:23 AM IST

சுவரில் படிந்திருக்கும் எண்ணெய் கறைகளை இந்த எளிய உதவிக்குறிப்புகள் மூலம் அவற்றை சுலபமாக அகற்றலாம். இப்போது அதுகுறித்து இங்கு பார்க்கலாம்..

கார்த்திகை மாதம் வந்தால் பலர் வீட்டின் முன் சுவர்களில் தீபம் ஏற்றுவார்கள். இதைச் செய்யும்போது சுவர்களில் எண்ணெய் கறை படுவது  மிகவும் பொதுவானது. ஆனால் இந்த பிடிவாதமான கறைகள் எளிதில் மறைந்துவிடாது. அவற்றை சுத்தம் செய்ய அதிக முயற்சி எடுக்க வேண்டும். எனவே, நீங்கள் இந்த எளிய உதவிக்குறிப்புகள் மூலம் அவற்றை சுலபமாக அகற்றலாம். இப்போது அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.

முதலில் எண்ணெய் கறைகள் படிந்த பகுதியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பின்னர் உலர்ந்த துணியில் சிறிது பாத்திரம் கழுவும் திரவத்தைப் பயன்படுத்துங்கள். பின்னர் அதை எண்ணெய் கறைகள் படிந்த இடத்தின் மீது தேய்க்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் எண்ணெய் கறைகள் எளிதில் நீங்கும்.

இதையும் படிங்க:  உங்கள் வாட்டர் பாட்டிலை இப்படி சுத்தம் பண்ணுங்க.! அழுக்கு கிருமி வாடை ஏதும் இருக்காது..!!

Tap to resize

சுவரில் படிந்த எண்ணெய் கறைகளை அகற்ற மற்றொரு உதவிக்குறிப்பு, இதற்கு முதலில் கறை படிந்த இடத்தில் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி, சிறிது நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பின் ஈரமான துணியால் அப்பகுதியை துடைக்கவும். பேக்கிங் சோடா எண்ணெயை உறிஞ்சும். இது கறையை நீக்கும்.

இதையும் படிங்க:  அட இனி உங்கள் தலையணையை இப்படி சுத்தம் செய்து பாருங்க! புதுசு போல் பளிச் பளிச்சு தான்...!!

எலுமிச்சை சாறு கறை நீக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. எலுமிச்சம் பழச்சாறு மூலம் எண்ணெய் கறைகளையும் நீக்கலாம். இதற்கு எண்ணெய் கறைகள் படிந்த இடத்தில், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் எலுமிச்சை சாற்றை ஈரமான துணியால் துடைக்கவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கோதுமை மாவைக் கொண்டும் இந்தக் கறைகளை நீக்கலாம். எண்ணெய் படிந்த சுவர்களில் கோதுமை மாவை தெளிக்கவும். ஒரு மணி நேரம் அப்படியே விடவும். கோதுமை மாவு எண்ணெயை உறிஞ்சும். இது கறையை நீக்கும். அதன் பிறகு, மாவை தண்ணீரால் சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம், கறைகள் விரைவாகவும், எளிதாகவும் சுத்தம் செய்யப்படும்.

Latest Videos

click me!