Electricity Bill
வீட்டு மின்சார கட்டணம் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துகொண்டே போகிறதா? அப்படியானால், மின்சாரப் பயன்பாட்டில் சில எளிமையான மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் மின்கட்டணத்தைப் பாதியாகக் குறைத்துவிடலாம். எப்படி என்பதை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
பல வீடுகளில் ஒவ்வொரு முறையும் EB கட்டணத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் சில வழிமுறைகளைப் பின்பற்றி சிறிய மாற்றங்களைச் செய்துகொண்டால், மின்கட்டணம் தற்போது உள்ளதைவிட பாதியாகக் குறையும்.
Electricity
வீட்டில் டியூப் லைட்டுக்குப் பதிலாக LED பல்பு அல்லது LED ட்யூப் லைட்டை பயன்படுத்தலாம். 2 வாட்ஸ் முதல் 40 வாட்ஸ் வரை LED பல்புகள் கிடைக்கின்றன. LED டியூப் லைட்டுகளும் குறைவான விலையில் கிடைக்கின்றன.
பழைய ஃபேன் பயன்பாட்டில் இருந்தால், அதுவும் மின்கட்டணம் உயரக் காரணமாக இருக்கலாம். பழைய மாடல் மின்விசிறியை உடனே மாற்றிவிடுவது நல்லது. அவை 100-140 வாட்ஸ் மின்சாரத்தை நுகர்பவை. ஆனால், தற்போது சந்தையில் கிடைக்கும் BLDC வகை மின்விசிறிகள் 40 வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றன.
சாதாரண ஏசி பயன்படுத்துபவர்கள் இன்வெர்ட்டர் ஏசிக்கு மாறலாம். வழக்கமான விண்டோ அல்லது ஸ்பிலிட் ஏசிக்குப் பதிலாக இன்வெர்ட்டர் ஏசி பொறுத்தினால் மின்சார கட்டணம் குறைவதைக் கண்கூடாகப் பார்க்க முடியும்.