இந்த தம்பதிக்கு 2015-ம் ஆண்டு ஸிவா என்ற மகள் பிறந்தார். ஸிவா என்றால் வெளிச்சம் அல்லது கடவுளின் ஒளி என்று அர்த்தம்.
48
ஆனால் ஸிவா பிறக்கும் போது தோனி ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை விளையாடியாதல் அவரை பார்க்க வர முடியவில்லை. அந்த போட்டி முடிவடைந்த பின்னரே தனது மகளை பார்க்க வந்தார் தோனி.
58
தந்தை ஆட்டத்தை ரசிக்க மைதானத்திற்கு விசிட் அடிப்பதை தவறவிடமாட்டார் ஸிவா. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கு மகள் ஸிவாவை தவறாமல் அழைத்து வர தொடங்கினார் தோனி.
68
Ziva Dhoni
இதனால் சிறு வயதிலேயே ஸிவாவுக்கு ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினர். வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் அளவுக்கு ஸிவா ஒரு வெறித்தனமான சிஎஸ்கே ரசிகை.
78
தற்போது 8 வயதாகும் ஸிவா இன்ஸ்டாகிராம் 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டுள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸிவா தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
88
அந்த வகையில் தற்போது தனது நாயுடன் இருக்கும் புகைப்படங்களையும், இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசிக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.