எப்புட்ரா.. ஒரேநேரத்தில் அம்மா, பாட்டி, மகள், மாமியார் கர்ப்பம்? பேமிலியோடு நடத்திய கர்ப்பகால போட்டோஷுட் வைரல்

First Published | Mar 24, 2023, 3:01 PM IST

கேரளாவில் பெண் ஒருவர் தனது தாய், மாமியார் மற்றும் பாட்டி ஆகியோருடன் சேர்ந்து கர்ப்பகால போட்டோஷூட் நடத்தி உள்ளதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

போட்டோஷூட் என்பது சினிமா நடிகர், நடிகைகள் மட்டும் தான் நடத்துவார்கள் என்கிற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது யார் வேண்டுமானாலும் போட்டோஷூட் நடத்தலாம். சமீபத்திய டிரெண்டும் அதுதான். 

முதலில் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் என அதிகளவில் நடத்தி வந்தனர். பின்னர் கர்ப்பகால போட்டோஷூட், குழந்தை பிறந்தா போட்டோஷூட் என தற்போது அனைத்து சுப காரியங்களுக்குமே போட்டோஷூட் நடத்துவது பேஷன் ஆகிவிட்டது.


அப்படி கேரளாவில் ஜோடி ஒன்று நடத்தியுள்ள போட்டோஷூட் தான் தற்போது செம்ம டிரெண்டிங்கில் உள்ளது. கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கர்ப்பகாலத்தை நினைவுகொள்ளும் வகையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

கர்ப்பகால போட்டோஷூட் என்பது வழக்கமாக நடத்தப்படும் ஒன்று தான். ஆனால் அதை அந்த பெண் நடத்தியுள்ள விதம் தான் அனைவரையும் வியக்கவைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... தொலைந்தது 60 பவுன்... கிடைத்தது 100 பவுன்- நகை திருட்டு வழக்கில் திருப்பம்.. ரஜினி மகளையும் விசாரிக்க திட்டம்?

அந்த போட்டோஷூட்டில் அந்த பெண் மட்டுமின்றி அவரது அம்மா, அவரது மாமியார், அவரது பாட்டி ஆகியோரும் கர்ப்பமான வயிற்றுடன் போஸ் கொடுத்துள்ளனர். முதலில் இதைப்பார்த்து பதறிப்போன நெட்டிசன்கள் எப்புட்ரா என ஷாக் ஆகி கமெண்ட் செய்து வந்தனர்.

பின்னர் அந்த போட்டோஷூட்டின் மேக்கிங் வீடியோவை பார்த்த பின்னர் தான் அந்த பெண் தவிர அவரது மாமியார், அம்மா மற்றும் பாட்டி ஆகியோர் வயிற்றில் தலையணையை வைத்துக்கொண்டு தாங்களும் கர்ப்பமாக இருப்பது போல் போஸ் கொடுத்தது தெரியவந்தது.

கேரள ஜோடி நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் செம்ம டிரெண்டிங்கில் உள்ளது. இதைப்பார்க்கும் போது  ‘ஏலே நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட’ என ஜிபி முத்து சொல்லும் டயலாக் தான் நினைவுக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்... சேலைய கூட அட்ஜஸ்ட் பண்ண முடியல... அதையும் ஜூம் பண்ணி பாக்குறாங்க - நடிகை வாணி போஜன் ஆதங்கம்

Latest Videos

click me!