Secret : பிறரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாத 5 விஷயங்கள்.. உங்களுக்கே ஆபத்தாக முடியலாம்.!

Published : Jul 10, 2025, 10:09 AM IST

ஒரு சில விஷயங்களை நாம் ரகசியாமக வைத்துக் கொள்ள வேண்டும். சில விஷயங்களில் மிகவும் வெளிப்படையாக இருப்பது ஆபத்தானது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
15
5 things you should never say to others

பிறரிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் சில உள்ளன. இந்த விஷயங்களை பகிர்வது உங்களையும், பிறரையும் பாதிக்கலாம். அதில் முக்கியமானது தனிப்பட்ட தகவல்கள். உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல், கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள், ATM கார்டு விவரங்கள் போன்றவற்றை பிறரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

25
வேலை செய்யும் இடத்தில் ரகசியம் பேணுங்கள்

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் ரகசியத் தகவல்கள் கிடைத்தால் அதை பிறரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இது உங்கள் வேலைக்கே ஆபத்தாக முடியலாம். உங்கள் சம்பள விவரங்கள் உள்ளிட்ட பிற தகவல்களையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஒருவேளை பிறர் உங்களை விட சம்பளம் குறைவாக வாங்கினால் அது உங்கள் மீது போட்டி, பொறாமையை உருவாக்கக் கூடும். எனவே தொழில் சார்ந்த விஷயங்களைத் தவிர வேறு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

35
நிதி நிலைமைகளை பகிராதீர்கள்

உங்கள் நிதி நிலைமைகளைப் பற்றிய தகவல்களை அதிகம் வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்களுடைய சம்பளம், சேமிப்பு விவரங்கள், நீங்கள் செய்யும் முதலீடுகள் ஆகிய விவரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. வீடு, நிலம், நகை ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு முன்பே அனைவரிடமும் கூறுதல் கூடாது. வாங்கி முடித்த பின்னர் விஷயத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது நல்லது.

45
உடல்நலனில் ரகசியமாக இருங்கள்

உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் அல்லது நோய்கள் இருந்தால் அதை அனைவரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உடல்நலனைப் பற்றிய தகவல்களைப் பகிர்வது தனிப்பட்ட விஷயம். ஆனால் அதை நம்பகமான நபர்களிடம் மட்டுமே சொல்ல வேண்டும். உடல்நலனை வைத்து சிலர் உங்களை கேலி, கிண்டல் செய்யக்கூடும். இது மனதளவில் கடுமையான உளைச்சலை ஏற்படுத்தலாம். எனவே உடல்நலன் சார்ந்த விஷயங்களில் ரகசியம் காப்பது நல்லது.

55
பிறரிடம் அரசியல் பேசாதீர்கள்

அரசியல் கருத்துக்களை பிறரிடம் தீவிரமாக பேசுவது ஆபத்து. அரசியல் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். அரசியல் கருத்துக்கள் தனிப்பட்டவை. இதை மற்றவர்களிடம் திணிப்பது சரியல்ல. அரசியல் சார்ந்த விவாதங்கள் ஆரோக்கியமாக செல்லும் வரை பிரச்சனை இல்லை. ஆனால் அது ஒரு கட்டத்தில் முற்றினால் ஆபத்தை விளைவிக்கலாம். அதேபோல் மத நம்பிக்கையும் மற்றவர்களிடம் திணிக்க கூடாது.

Read more Photos on
click me!

Recommended Stories