Sukran Peyarchi 2022 Palangal: ஜூலை 13 ஆம் தேதி சுக்கிரன் ராசி மாற்றத்தால், இன்னும் 10 நாட்களில் சில ராசிகளின் தலைவிதி மாறவுள்ளது. அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
ஒவ்வொரு மாதமும் பல கிரகங்கள் மற்றம் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜூலை மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதத்தில்கடந்த ஜூன் 2 ம் தேதி தனது ராசியை மாற்றியது இதையடுத்து, இன்னும் நான்கு கிரகங்கள் தனது ராசியை மாற்றப்போகிறது. இதில், சுக்கிரன் கிரகமும் அடங்கும். இந்த கிரகம் செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் சின்னமாக இருக்கிறது. அதன்படி, ஜூலை 13 ஆம் தேதி, சுக்கிரன் புதனின் ராசியான மிதுனத்தில் பிரவேசிக்கும். சுக்கிரன் இந்த ராசி மாற்றம் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை இருக்கும். இதன் பிறகு சுக்கிரன் கிரகம் கடக ராசிக்குள் நுழையும்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். அப்படியாக, சுக்கிரனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சுக்கிரனின் ராசி மாற்றத்தால், மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்வில் வெற்றி கிடைக்கும். லாபத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும்வாய்ப்பு உண்டாகும். இந்த காலத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலத்தில் பல சாதகமான முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் லாபம் உண்டாகும்.
துலா ராசிக்காரர்களும் சுக்கிரன் பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள்உண்டு. மூதாதையர் சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும்.தொழிலில் உழைத்து வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் வியாபாரத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலில் முன்னேற பலன்கள் உண்டாகும்.
44
Sukran Peyarchi 2022
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு, வேலையில் இந்த நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். கூட்டுப்பணிகள் செய்தால் லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும், இதனால் வளர்ச்சி அடைவீர்கள். இந்த காலத்தில் மேலதிகாரிகளுடன் நல்லுறவு ஏற்படும். ஊதிய உயர்வுக்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஒவ்வொரு செயலிலும் அதிர்ஷ்டம் உண்டாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.