வைட்டமின் டி சப்ளிமெண்ட்டு வயதானவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இருதய நிகழ்வுகளின் அபாயத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டிருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வானது, இதுபோன்ற மிகப்பெரிய சோதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 21,000 பங்கேற்பாளர்கள் மாதாந்திர வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை உட்கொண்டனர்.
BMJ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில், வைட்டமின் D கூடுதல் முக்கிய இருதய நிகழ்வுகளைத் தடுக்க உதவும் என்பது தெரியவந்துள்ளது, இருப்பினும் இந்த முடிவுகளை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவைப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே நடந்த ஆய்வுகளில், சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் மாரடைப்புகளைத் தடுப்பதில் வைட்டமின் டி-யின் பங்கை ஆதரிக்கும் ஆதாரங்களை வழங்கத் தவறிவிட்டன.
இருப்பினும், இந்த புதிய ஆய்வு, வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் இதய நோய்களின்அபாயத்தைக் குறைக்காது என்ற முந்தைய நம்பிக்கையை சவால் செய்கிறது. எனவே கூடுதல் ஆராய்ச்சியின் அவசியத்தை ஆசிரியர்கள் ஒப்புக்கொண்டனர்,
இதய நோய்கள் என்பது, இதயம் மற்றும் இரத்த நாளங்களைப் பாதிக்கும் கோளாறுகளின் குழுவாகும், மேலும் அவை உலகளவில் கணிசமான எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு காரணமாகின்றன.
சமீப காலமாக மாரடைப்பு பாதிப்பு இளைஞர்களிம் கூட அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில், பாரம்பரிய ஆபத்து காரணிகள் இல்லாத நபர்களுக்கும் இதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.