சைவ உணவு டயட்கள் இப்போதெல்லாம் பிரபலமாகி வருகின்றன, ஆனால், அதிக ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், அவை புரதம் மற்றும் வைட்டமின் பி 12 இல் பற்றாக்குறையாக இருக்கலாம். அமினோ அமிலங்கள் புரதங்களின் அடிப்படை கூறுகள். நம் வாழ்நாள் முழுவதும், அமினோ அமிலங்கள் செல் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானவை. புரோட்டீன் நமது சருமம், முடி மற்றும் நகங்களுக்கு நன்மை பயக்கும். அதிக புரதச்சத்து உள்ள உணவு தசைகளின் மறுவாழ்வுக்கும் உதவுகிறது. குறைவான புரதத்தை உட்கொள்ளும் ஒரு நபர், சோர்வு மற்றும் தசை வலிமை குறைவு போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கலாம். எனவே புரதம் நிறைந்த உணவுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.