Sevvai peyarchi; இன்னும் மூன்று நாட்களில் மிதுனத்தில் செவ்வாய் மறைவு..கஜகேசரி யோகம் பெறும் ராசிகள் இவைகள் தான்

First Published | Oct 26, 2022, 2:58 PM IST

Sevvai peyarchi 2022 Palangal: மிதுனத்தில் செவ்வாய் மறைவு, குறிப்பிட்ட 3 ராசிகள் வியாபாரத்தில் வெற்றியையும், தொழிலில் முன்னேற்றத்தையும் பெற்று வளம் பெறுவார்கள் என கூறப்படுகிறது. இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும் போது, ​​அதன் தாக்கம் 12 ராசிக்காரர்கள் மீதும் இருக்கும். கிரகங்களின் முக்கியமான கிரகமான, செவ்வாய் பகவான் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடமாற்றம் அடைந்தார். இதன் சுப மற்றும் அசுப பலன்கள் குறிப்பிட்ட ராசிகளின் மீது எதிரொலித்தது.

மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்..மகரம் ராசிக்கு வறுமை, துலாம் ராசிக்கு நிதி ரீதியாக லாபம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்?

இதையடுத்து, வரும் 30 அக்டோபர் 2022 ஆம் தேதி காலை 6 மணிக்கு செவ்வாய் கிரகம், மிதுன ராசியில் எதிர் திசையில் நகர்வார். இதனால், குறிப்பிட்ட 3 ராசிகள் வியாபாரத்தில் வெற்றியையும், தொழிலில் முன்னேற்றத்தையும் பெற்று வளம் பெறுவார்கள் என கூறப்படுகிறது. இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


ரிஷபம்:

ரிஷபம், ராசிக்காரர்களுக்கும் இந்தப் பெயர்ச்சி பலன் தரும்இதனால் உங்களுக்கு வீரமும் தைரியமும் அதிகரிக்கும். எதிரிகளை வெல்ல முடியும். இதுமட்டுமின்றி நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி:

செவ்வாய் மறைவு இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். எனவே இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் செய்யும் திட்டமும் வெற்றி பெறும்.  எனினும், இந்த நேரத்தில், வேலையை சற்று எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். 

மிதுனம்:

செவ்வாய் மறைவு  இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது. இது குழந்தைகள், காதல் விவகாரங்கள் மற்றும் உயர்கல்வியின் வீடு என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் உண்டு. குழந்தை தரப்பிலிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதல் உறவுகளும் வலுவாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பு வரக்கூடும். 

மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்..மகரம் ராசிக்கு வறுமை, துலாம் ராசிக்கு நிதி ரீதியாக லாபம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்?

Latest Videos

click me!