Silver jewellery Buying Tips: வெள்ளி நகை வாங்க போறீங்களா..? அதற்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு போங்க.!

First Published | Oct 26, 2022, 11:52 AM IST

Silver jewellery Buying Tips: நீங்கள் வெள்ளி நகைகள் வாங்கும் போது சரிபார்க்க வேண்டிய விஷயங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை பார்ப்போம். 

இன்றைய காலகட்டத்தில் எல்லாமே மாறி போனாலும் கூட, தங்கள், வெள்ளி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகிறது. தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும் நிலையில், சாமானிய மக்களின் எளியத் தேர்வாக வெள்ளி நகைகள் இருக்கிறது. அதுமட்டுமின்று, காலில் அணியும் கொலுசு, பெண்கள் அணியும் மிஞ்சி, குழந்தைகள் அணியும் தண்டை போன்றவை தங்கத்திலும், பிற உலோகத்திலே வந்து இருந்தாலும், வெள்ளியில் தான் இன்றளவும் அனைவரும் விரும்பி அணிகிறார்கள்.

அது மட்டும் இன்றி கால் கொலுசை வெள்ளியில் வாங்குவது நல்லது என்று ஒரு சாஸ்திர காரணமும் உண்டு.  இந்தப் பொருட்களை பண்டிகைக் காலங்களில் வாங்குவது இன்னும் சிறப்புக்குரிய விஷயமாக இருக்கும். அப்படி நீங்கள் வெள்ளி நகைகள் வாங்கும் போது சரிபார்க்க வேண்டிய விஷயங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை பார்ப்போம். 

Tap to resize

நீங்கள் வீட்டில் இருந்து நகை வாங்க கிளம்பும் முன், தங்கம், வெள்ளியின் அன்றைய தின மதிப்பீடு என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வெள்ளியின் எடை எவ்வளவோ, செய்கூலி, சேதாரம் எவ்வளவு சதவீதம் போடப்படுகிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...கருத்து போன உங்கள் கழுத்து, கை, கால்களை வெறும் 5 நிமிடத்தில் வெள்ளையாக மாற்ற..இந்த ஒரு சூப்பரான டிப்ஸ் இருக்கு

வெள்ளி நகைகளுக்கான மதிப்பை கணக்கீடு செய்ய வேண்டும்:

வெள்ளி எடைக்கான மதிப்பு, செய்கூலி, ஹால்மார்க் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரி ஆகிய அனைத்திற்கும் சேர்த்து தான் கட்டணம் செலுத்த வேண்டும். நீங்கள் வாங்கும் தங்கம் சரியானதுதான் என்பதை கண்டறிவது அவசியம். BIS விதிமுறைகளின் படி, நீங்கள் நகை வியாபாரிகளிடமிருந்து ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை வாங்கினால் அதற்குச் சான்றாக பில் அல்லது ரசீது வாங்க வேண்டியது அவசியம்.

சரியான ரசீது தேவை 

சில நகைக்கடைகளில் செய்கூலி கட்டணம் தனியாக வசூல் செய்வார்கள். சில கடைகளில் வெள்ளி கிராம் விலையுடன் செய்கூலி கட்டணத்தை சேர்த்து விடுவார்கள். எனவே, சரியான ரசீது கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை, ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
 

ட்ரெண்டிங் நகை :

இன்றைய நவீன காலத்தில் வைரம் அல்லது விலை மதிப்புமிக்க கல் பதித்த வெள்ளி நகைகளை வாங்குவது  ஃபேஷன் ஆகிவிட்டது. உங்கள் நகையில் பதிக்கப்படும் கல்லுக்கு தனியாக மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அந்தக் கல்லுக்கும் சேர்த்து வெள்ளியின் எடை இருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ரோடியம் பிளேட்டிங் :

நாம் ஆசையாக, பார்த்து வாங்கும் இந்த வெள்ளி நகை வாங்கிய சில மாதங்கள் அல்ல சில நாட்களிலே ஒரு சில கால்களுக்கு கறுத்து போய் விடும். ஆகவே, இதனை தவிர்க்க ரோடியம் என்னும் உலோகத்தை நகை தயாரிப்பாளர்கள் கலக்கின்றனர். அந்த வகை நகை தேவையென்றால் கேட்டு வாங்கவும்.

வெள்ளி நகையின் தனி சிறப்பு

தங்கத்தை போன்று, வெள்ளியின் உறுதித்தன்மை பொறுத்து அதை தரம் பிரிக்கின்றனர். அதாவது 999 அளவுக்கு உறுதித்தன்மை கொண்டது சுத்தமான வெள்ளி ஆகும். 925 அளவுக்கு உறுதித்தன்மை கொண்ட வெள்ளியில் பிற உலோகங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். 

மேலும் படிக்க...கருத்து போன உங்கள் கழுத்து, கை, கால்களை வெறும் 5 நிமிடத்தில் வெள்ளையாக மாற்ற..இந்த ஒரு சூப்பரான டிப்ஸ் இருக்கு

வெள்ளி நகைகள் பராமரிக்க:

வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப் பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால், பளபளப்பாக இருக்கும்.
 
கம்ப்யூட்டர் சாம்பிராணி எரிந்த தூள் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தயிர் சேர்த்து,  கறுத்து போன உங்கள் வெள்ளி நகைகளின் மீது தேய்த்து சுத்தம் செய்தால், வெள்ளி நகை பளபளன்னு மின்னும்.

அதேபோன்று, துணி பவுடர் எடுத்து கொள்ளுங்கள். இதனுடன், அரை ஸ்பூன் அளவுக்கு பேக்கிங் சோடா கலந்து தேய்த்தால் போதும் வெள்ளி நகை ஜொலிக்கும்.

Latest Videos

click me!