Guru Peyarchi2022 Palangal: குருவின் ராசி மாற்றம் 12 ராசிகளும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி காலம் சிறப்பாக இருக்கும்..அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.
ஜோதிடத்தின் பார்வையில், செவ்வாய், புதன் மற்றும் குரு உள்ளிட்ட ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் செயல்முறையை பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. கிரகங்களின் ராசி மாற்றங்கள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு கிரகத்தின் படி சில ராசிகளுக்கு சாதகமாகவும், சில ராசிகளுக்கு பாதகமாகவும் இருக்கும். செவ்வாய், புதன், தேவகுருவான வியாழன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளன. இது வரும் 140 நாட்களுக்கு அதாவது 6 ஜனவரி 2023 வரை நீடிக்கும் இதனால், சில குறிப்பிட்டசில ராசிகளுக்கு,சிறப்பாக இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.
கிரகங்களின் ராசி மாற்றம், மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். இது வரும் 140 நாட்கள் முதுன ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், வியாபாரத்தில் லாபம் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும் . திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
துலாம் ராசிக்காரர்களுக்குகுருவின் மாற்றம் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் பணிகள் அனைத்திலும், குடும்ப உறுப்புனர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு செல்வம் பெருகும்..
பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
44
Guru Peyarchi2022:
மீனம்:
மூன்று முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தின் தாக்கம் மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.இந்த காலகட்டத்தில்உங்களுக்கு தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.