Onam Festival 2022:
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு விதமான பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நம்முடைய தமிழகத்தில், பொங்கல், தீபாவளி, சித்திரை திருவிழா, ஜல்லிக்கட்டு போன்றவை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.
அந்த வகையில், கேரளாவை பொறுத்தவரை ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சாதி, மாத பேதம் இன்றி மலையாளம் மொழி பேசும் மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இந்த நாளில், புத்தாடை அணிந்து, விதவிதமான உணவு பொருட்களை சமைத்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்கின்றனர். அதன்படி, கேரளாவில் இந்த வருடத்திற்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30 ஆம் தேதி கோலாகலமாக துவங்கி, நாளை செப்டம்பர் 8 தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது.
மேலும் படிக்க...Sani Peyarchi: 141 நாட்களுக்கு பிறகு சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு அளவில்லாத அதிர்ஷ்டம் கிடைக்கும்
Onam Festival 2022:
ஓணம் ஸ்பெஷல் அத்தப்பூக்கோலம்
இத்திருநாளில் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மலர்களால் ஆன அத்தப்பூ கோலம் இடப்பட்டிருக்கும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர்.
Onam Festival 2022:
ஓணம் பண்டிகையின் வரலாறு:
கேரளத்தை முன்னர் செல்வ செழிப்போடு மகாபலி என்ற மாமன்னர் ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது வேற்று ரூபத்தில் வந்து திருமால் மூன்றடி மண் கேட்டார்..அப்போது, திருமாலுக்கு மூன்றாவது அடிக்காகத் தனது தலையையே பலியாக கொடுத்தான் மகாபலி. உடனே திருமால் மிகச்சிறந்த அரசனான மகாபலியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்க, நான் ஆண்டு தோறும் என் மக்களை வந்து பார்த்து அவர்கள் எப்படி செழிப்பாக இருக்கிறார்கள், வாழ்கிறார்கள் என பார்க்க இந்த பூலோகம் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என கேட்டார்.
Onam Festival 2022:
ஓணம் பண்டிகை கேரளாவிற்கு மட்டுமா..?
கேரளாவில் மட்டுமின்றி கேரள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். தமிழ்நாட்டிலும் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓணம் கொண்டாடப்படும்.