sani peyarchi 2022
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நீதியின் கடவுளான சனி தேவன் சனி பகவான் தனது ராசியை மாற்றி மகர ராசியில் வக்ர நிலையில் அதாவது பிற்போக்கு இயக்கத்தில் இருக்கிறார். மகர ராசியில் சனி பகவானின் பிற்போக்கு இயக்கம் அனைத்து ராசிகளிலும் சுப மற்றும் அசுப பலன்களை தரும். எனினும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இன்னும் 3 மாதங்கள்மிகவும் நல்ல நேரத்தை கொண்டு வந்துள்ளது. இந்த காலத்தில், மகர ராசியில் சனி எதிர் திசையில் சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களின் விதியை மாற்றி அபரிமிதமான பலன்களை தருகிறார். அந்த அதிர்ஷ்டத்துடன் கூடிய ராசிகள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க ...Rahu Peyarchi 2022: ராகுவால் உண்டாகும் புதிய மாற்றம்..இந்த ராசிகள் மீது அருள் மழை பொழியும்..மகிழ்ச்சி பொங்கும்
sani peyarchi 2022
மகரம்:
மகர ராசியில் சனிபகவான் 11 ஆவது வீட்டில் பிற்போக்கு நிலையில் இருக்கிறார். மகரம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் துவங்கியுள்ளன. இது வீடு வருமானம் மற்றும் லாபத்திற்கான ஸ்தானமாக கருதப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். இதன் மூலம் நீங்கள் பெரும் பணத்தைப் பெறலாம்.