Sani Peyarchi: சனியின் கருணையால் அடுத்த 6 மாதங்கள்..திடீர் பண மழையில் நனையும் ராசிகளில் ..நீங்களும் ஒருவரா?

First Published | Jul 24, 2022, 1:45 PM IST

Sani Peyarchi 2022 Palangal: நீதியின் கடவுளான சனி பகவான் மகர ராசியில் பிரவேசத்தால், அடுத்த 6 மாதங்களுக்கு குறிப்பிட்ட ராசிகளுக்கு சனிபகவான் அருள் மழை பொழிய இருக்கிறார். யார் அந்த அதிர்ஷ்ட சாலிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

Sani Peyarchi 2022:

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி பகவான் நீதி மற்றும் தண்டனையின் கடவுளாக கருதப்படுகிறார். எனவே, அவரவர் செய்கைகளுக்கு ஏற்ற படி சனி பகவான் தண்டனை வழங்குவார். சனியின் உக்கிர பார்வை காரணமாக, மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இருப்பினும், சனி அருள் மழையை பொழிய துவங்கி விட்டால், நமது வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் அகற்றி விடுவார். ஆகையால், நாம் நல்லவற்றை செய்தால், சனி பகவான் நமக்கு நல்ல பலன்களையே அளிப்பார். அப்படியாக, மகர ராசிக்குள் நுழைந்துள்ள நீதிதேவன், அடுத்த 6 மாதங்களுக்கு 3 ராசிக்காரர்களுக்கு தனது ஆசிகளை அள்ளித்தருகிறார். அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க....Weekly Horoscope: இந்த வார ராசி பலன்..25 ஜூலை முதல் 31 ஜூலை 2022 வரை..இந்த ராசிகளுக்கு திடீர் பண வர இருக்கும்

Sani Peyarchi 2022:

தனுசு: 

இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 6 மாதங்கள் நன்றாகவே இருக்கும். உங்களின் வேலை மற்றும் தொழில்களில் பதவி உயர்வு பெறலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவு பெறும்.  இந்த நேரத்தில் குழந்தைகளால் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.  இந்த காலகட்டத்தில் நீங்கள் தற்செயலாக ஒரு பெரிய தொகையை பெறக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: இன்னும் 4 நாட்களில் மீனத்தில் குரு பெயர்ச்சி...இந்த ராசிகளின் தலைவிதி தலைகீழாய் மாறும்...

Tap to resize

Sani Peyarchi 2022:

மகரம்:

மகர ராசியில் சனி பகவான் சஞ்சரிப்பது இந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த ராசிக்காரர்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கலாம். இந்த காலகட்டத்தில் வருமானம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். 

Sani Peyarchi 2022:

மீனம்: 

சனிபகவானின் ராசி மாற்றத்தால் மீன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோஜம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகளால் நன்மைகள் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு இந்த நேரத்தில் புதிய வேலை கிடைக்கும். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.

மேலும் படிக்க....Weekly Horoscope: இந்த வார ராசி பலன்..25 ஜூலை முதல் 31 ஜூலை 2022 வரை..இந்த ராசிகளுக்கு திடீர் பண வர இருக்கும்

Latest Videos

click me!