உணவாகும் ஆவாரம் பூ:
ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.
கண்களுக்கு சிறந்தது:
சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாக, ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சருமத்தில் வீக்கம் இருந்தால் பட்டை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்கப்பட்டு சுத்தம் செய்து வந்தால் படிப்படியாக வீக்கம் குறைக்கும்.