Sun transit 2022
சூரிய பெயர்ச்சி 2022:
ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது. அதேபோன்று, சூரியன், 30 நாட்களுக்குப் பிறகு, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். அதன்படி, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி, சூரியன் கடக ராசியை விட்டு சிம்ம ராசியில் பிரவேசித்தார். அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
இதையடுத்து, இவர் வரும் செப்டம்பர் 17 வரை சிம்மத்தில் இருக்கப் போகிறார். இங்கிருந்து பிறகு சூரியன் கன்னி ராசியில் பிரவேசிப்பார். சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பதால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில அசுப பாதிப்புகள் ஏற்படும். இதனால், எந்தெந்த ராசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க...பாத்திரம் கழுவும் சிங்க், பாத்ரூம் சிங்க் போன்றவற்றில் அடிக்கடி அடைப்பு ஏற்படுதா? சுத்தம் செய்ய மேஜிக் டிப்ஸ்!
sun transit 2022
சிம்மம்:
சூரியன் சிம்ம ராசிக்கு 12வது வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது குறிப்பாக தொழிலதிபர்களுக்கு பிரச்சனையை தரும். அதேபோன்று, இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்களை தவிர்த்தல் நல்லது. இந்த ராசிக்காரர்களின் குழந்தைகளின் வாழ்க்கையில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, எச்சரிக்கை அவசியம்.