பாத்திரம் கழுவும் சிங்க், பாத்ரூம் சிங்க் போன்றவற்றில் அடிக்கடி அடைப்பு ஏற்படுதா? சுத்தம் செய்ய மேஜிக் டிப்ஸ்!

First Published | Aug 22, 2022, 2:07 PM IST

How to clean bathroom Wash basin and Kitchen sink: உங்களது வீடுகளில் பாத்திரம் கழுவும் சிங்க், பாத்ரூம் போன்றவற்றில் அடைப்பு ஏற்பட்டால் நொடியில் எப்படி சுத்தம் செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

Cleaner caustic-soda

நம்முடைய வீடுகளில்  பாத்திரம் கழுவும் சிங்க், பாத்ரூம் வாஸ்பேஷன் போன்றவற்றில் உணவு துகள்கள், சோப்பு துண்டுகள், முடிகள் போன்றவற்றால் அடிக்கடி அடைப்பு ஏற்படும். இதனால் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் நமக்கு எரிச்சல் ஏற்படும். எனவே, உங்களது வீடுகளில் இனிமேல் இதுபோன்ற அடைப்பு ஏற்பட்டால் நொடியில் எப்படி சுத்தம் செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க...Teeth: இந்த வகை பற்களை உடையவர்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் இருக்குமாம்? உங்கள் பற்களின் ஆளுமை பற்றி தெரியுமா?
 

Cleaner caustic-soda

இதற்காக நீங்கள் ரொம்பவே சிரமப்பட்டு பைப்புகளில் சென்று அடைப்புகளை சரி செய்ய தேவையில்லை. இந்த ஒரு சோடாவை தூவி விட்டால் போதும், நொடியில் அடைப்புகள் நீங்கி தண்ணீர் மடமடவென வெளியே போக ஆரம்பித்து விடும். அது என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

Tap to resize

Cleaner caustic-soda

இந்த காஸ்டிக் சோடா மெழுகுவர்த்தி தயாரிப்பது, பயோடீசல், உரைபனி கண்ணாடி, சோப்பு தயாரித்தல் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது காஸ்டிக் சோடா அல்லது சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH) என்று கூறுவார்கள். இது எல்லா நாட்டு மருந்து கடைகள், கெமிக்கல் ஷாப், வயலுக்கு உரம் வாங்கும் கடைகள், மளிகை கடைகளிலும் கிடைக்கும். இதை வடிகால்களில் பயன்படுத்துவதற்கு ட்ரெய்ன் கிளீனர் என்று கேட்டு வாங்க வேண்டும்.

மேலும் படிக்க...Teeth: இந்த வகை பற்களை உடையவர்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் இருக்குமாம்? உங்கள் பற்களின் ஆளுமை பற்றி தெரியுமா?

Cleaner caustic-soda

இதனை அடைப்பு இருக்கும் வடிகால்களில் கொஞ்சம் போல் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி விட்டால் போதும், அரை மணி நேரம் கழித்து பார்த்தால் போதும் எவ்வளவு அடைப்புகள் இருந்தாலும் அதை நொடியில் சரி செய்து விடும். தண்ணீர் ஊற்றியதும் நுரைக்க ஆரம்பிக்கும். பின் பொங்கி அழுக்குகளை வெளியில் தள்ளும். உள்ளிருக்கும் பொருட்களை கரைத்து பஞ்சு போல ஆக்கி விடும் வீரியம் கொண்டது.

Cleaner caustic-soda

இதனால் அடைப்புகள் நீங்கி சுலபமாக தண்ணீர் வெளியேறும்.  மாதம் ஒருமுறை இது போல ஒரு ஸ்பூன் அளவுக்கு போட்டு சுடு தண்ணீர் ஊற்றி விடுங்கள். உங்கள் வீட்டில் பைப்புகள் எப்போதும் சுத்தமாக இருக்கும். அடைப்பு என்பது இருக்கவே இருக்காது.

Cleaner caustic-soda

பின் குறிப்பு: இந்த காஸ்டிக் சோடா பயன்படுத்தும் பொழுது கையுறைகள் அணிந்து பயன்படுத்துவது நல்லது. மேலும் இது நெடியை ஏற்படுத்தும் என்பதால் தொலைவில் வைத்து உபயோகியுங்கள்.இருப்பினும், இது ரசாயன  பொருள் என்பதால் வீட்டில் குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.

மேலும் படிக்க...Teeth: இந்த வகை பற்களை உடையவர்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் இருக்குமாம்? உங்கள் பற்களின் ஆளுமை பற்றி தெரியுமா?

Latest Videos

click me!