சூரியன் பெயர்ச்சி 2022:
ஜோதிடத்தின் பார்வையில், சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுகிறார். இந்த வழியில், சூரியன் ஆண்டு முழுவதும் 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். அந்த வகையில், சூரிய பகவான் நாளை கடக ராசிக்குள் நுழைகிறார். ஜூலை 16 இரவு, இரவு 11.11 மணிக்கு பெயர்ச்சியாகிறார். கடகத்தின் அதிபதி சந்திரன். சூரியன் சந்திரனின் வீட்டிற்குள் நுழைவது வெவ்வேறு ராசிகளில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் மட்டும் கெடு பலன்களை அனுபவிப்பார்கள். எனவே, அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.