உணவை கைகளால் உண்பது ஏன் நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன..? ஆயுர்வேதம், வேதங்கள் கூறும் நன்மைகள்...!

Published : Oct 07, 2022, 07:08 AM IST

Health care tips in tamil: ஸ்பூனுக்கு பதிலாக உணவை கையால் உண்பது மிகவும் ஆரோக்கியமானது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவற்றின் நன்மைகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
17
உணவை கைகளால் உண்பது ஏன் நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன..? ஆயுர்வேதம், வேதங்கள் கூறும் நன்மைகள்...!

உணவை கையால் சாப்பிடுவது தான் நம்முடைய பாரம்பரிய வழக்கம். ஆனால், இன்றைய நவீன காலத்தில் நாகரீகம் என்ற பெயரில், நமது பாரம்பரிய பழக்கங்களை மறந்து ஸ்பூன், போர்க் மற்றும் கத்தி போன்றவற்றால் உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். ஆனால் உண்மையில் நம் முன்னோர்கள் இப்படி கையால் உணவை சாப்பிட்டதற்கு பின்னால், பல நன்மைகள் அடங்கியுள்ளன. அவை என்னென்னெ நன்மைகள் என்பதைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு சோதனை..!மகரம் ராசிக்கு தானம் சிறந்தது..உங்கள் ராசிக்கு என்ன பலன்

27

ஆம் ஆயூர்வேதம் மற்றும் வேதங்களின் கூற்றுப்படி,  உணவை கைகளால் சாப்பிடுவது வித்தியாசமான சுவையையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்கிறார்கள். 
 
நாம் கைகளால் உணவை உண்பதன் மூலம், வயிற்றில் உள்ள கூறுகள் செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகின்றன மற்றும் உணவு எளிதில் ஜீரணமாகும். மேலும் உணவை ரசித்து ருசித்து உண்பதற்கு வைக்கும்.

37

ஆயுர்வேதத்தின் படி, கையால் உணவை உண்பவர்களுக்கு விரைவில் பசி ஏற்படாது. கைகளால் உணவு உண்பதால் வயிறு எளிதில் நிறைகிறது. இதனால், உங்களுக்கு, மதிய உணவுக்குப் பிறகு இரவு வரை லேசான உணவுகளே போதுமானது. இது எடையைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும், உணவு உண்பதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவுவது மிகவும் அவசியம்.

47

நிபுணர்களின் கூற்றுப்படி, ஸ்பூன் மூலம் நம்முடைய உணவை விரைவாக சாப்பிடுகிறோம். இது சர்க்கரையின் சமநிலையை சீர்குலைத்து, நீரிழிவு (டைப்-2) அபாயத்தை குறைக்கிறது. மேலும், டைப் 2 நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் ஸ்பூன் ஃபோர்க் சாப்பிடுபவர்கள் என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆனால் உணவை ஸ்பூன் மற்றும் போர்க்கில் சாப்பிடும் போது, இந்த நன்மைகள் கிடைப்பதில்லை.

57

உணவு உண்ணும் போது விரல்கள் மற்றும் கட்டை விரலை இணைக்கும்போது, ​​நமக்குள் ஒரு ஆற்றல் உருவாகிறது, இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கையால் உணவைசாப்பிடும் போது, கைகளின் விரல்களில் இருக்கும் ஐந்து கூறுகளும் தூண்டப்பட்டு, நீங்கள் சாப்பிட வேண்டிய உணவை உற்சாகத்துடன் சாப்பிட உதவுகிறது.

மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு சோதனை..!மகரம் ராசிக்கு தானம் சிறந்தது..உங்கள் ராசிக்கு என்ன பலன்

67

கைகளால் உணவு உண்பதன் மற்றொரு நன்மை என்னவென்றால், உணவின் சூட்டினை அறிந்து கொள்ள முடியும். கையால் உணவு உண்ணும் போது, ​​உணவு எவ்வளவு சூடாக இருக்கிறது என்பது தெரியும். ஆனால், ஸ்பூன் கொண்டு சாப்பிடும் போது, அது நமக்குத் தெரியாது.  

 

77

கையால் உணவு உண்ணும்போது ரத்த ஓட்டம் சீராகும். அதுமட்டுமின்றி, பருப்பு, சாதம் கலந்து சாப்பிடுவதால் விரல்களின் மூட்டுகளும் நன்றாக வேலை செய்யும். இதற்கு ஏற்ப மூளையானது செரிமான அமிலம் மற்றும் நொதிகளை வெளியிடத் தூண்டிவிட்டு, உணவின் முழு சுவையையும் அனுபவிக்க உதவும்.

மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு சோதனை..!மகரம் ராசிக்கு தானம் சிறந்தது..உங்கள் ராசிக்கு என்ன பலன்

Read more Photos on
click me!

Recommended Stories