Guru Peyarchi 2022: மேஷத்தில் குரு பெயர்ச்சி...தீபாவளிக்கு பிறகு இந்த 3 ராசிகளுக்கு தலைவிதி தலைகீழாய் மாறும்.!

Published : Oct 07, 2022, 06:00 AM IST

Guru Peyarchi 2022 Palangal: குருவின் மாற்றத்தால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு வாழ்வில் அதிகப்படியான நல்ல பலன்களை அள்ளித் தரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

PREV
15
Guru Peyarchi 2022: மேஷத்தில் குரு பெயர்ச்சி...தீபாவளிக்கு பிறகு இந்த 3 ராசிகளுக்கு தலைவிதி தலைகீழாய் மாறும்.!

28 அக்டோபர் 2022: ஜோதிடத்தில் கிரகங்களின் நிலை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. குருவின் பெயர்ச்சி அனைத்து 12 ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு விளைவுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். இருப்பினும், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இந்த குருவின் பெயர்ச்சி, அதிகப்படியான நன்மை பலன்களை அள்ளித் தரும். 

 

25

கிரகங்களில் மிக முக்கிய கிரகங்களில் ஒன்றான வியாழன், தீபாவளிகு பிறகு தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். தேவகுரு வியாழன் அக்டோபர் 28 அன்று, அவர் மேஷத்தில் நுழைவார். குரு பகவான் நவம்பர் 24, 2022 வரை இந்த ராசியில் இருப்பார். இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு, வேலை மற்றும் வியாபாரத்தில் மகத்தான வெற்றிகள் கிடைக்கும். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் எவை என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு சோதனை..!மகரம் ராசிக்கு தானம் சிறந்தது..உங்கள் ராசிக்கு என்ன பலன்

35
Sun and Venus Transit

ரிஷபம்:

ரிஷப ராசியினருக்கு, குருவின் இயக்கம் வியாபாரத்தில் நல்ல பலன்களைக் கொண்டு வரும். ரிஷப ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். உங்கள் வீட்டில் சுப காரியங்களும் நடைபெறலாம்.

45

மிதுனம்: 

வியாழனின் சஞ்சாரம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை கொண்டு வரும். மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அனைத்திலும் முன்னேற்றம் அடைவார்கள். வாகனம், சொத்து வாங்கும் யோகம் தற்போது உண்டாகும். உறவுகளில் இனிமை இருக்கும். வியாபாரத்தில் பல புதிய ஒப்பந்தங்கள் கைகூடும் வாய்ப்புகள் உள்ளன. 

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு சோதனை..!மகரம் ராசிக்கு தானம் சிறந்தது..உங்கள் ராசிக்கு என்ன பலன்

55

கடகம்: 

குருவின் பாதை மாற்றத்தால் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இந்த நேரத்தில்,  நாள்பட்ட நோய்களில் இருந்தும் விடுபடலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். மேலும், தொழில் சம்பந்தமான விஷயங்களுக்காக வெளிநாடு செல்லலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories