Soft Idli Recipe: பூ மாதிரி இட்லி சுடணுமா? 3 பொருள் 3 பதம்.! மல்லிகைப்பூ இட்லிக்கு நான் கேரண்டி.!

Published : Sep 03, 2026, 01:54 PM IST

இட்லி உடம்புக்கு ரொம்ப நல்லது. ஆனா, நிறைய பேர் சுடும்போது இட்லி கல்லு மாதிரி ஆகிடும். பூ மாதிரி சாஃப்ட்டா வர்றதுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம குழம்புவாங்க. ஆனா, ஒரு சிம்பிள் முறையை ஃபாலோ பண்ணா போதும், இட்லி பஞ்சு மாதிரி சாஃப்ட்டா வரும்.

PREV
14
பல சமயம் நாம நினைக்கிற மாதிரி இட்லி வராது
வீட்ல தினமும் ஏதாவது ஒரு டிபன் செய்வோம். தோசை, பூரி, பரோட்டானு செஞ்சாலும், இட்லிக்கு தனி இடம் உண்டு. சீக்கிரமா செஞ்சிடலாம், டேஸ்ட்டாவும் இருக்கும்னு நிறைய பேர் இட்லி தான் செய்வாங்க. ஆனா, பல சமயம் நாம நினைக்கிற மாதிரி இட்லி வராது.
24
பஞ்சு மாதிரி இட்லி கிடைக்கும்
ஒன்னு இட்லி கல்லு மாதிரி ஆகிடும், இல்லனா ரொம்ப குழைஞ்சு போகும். இது ஏன் இப்படி ஆகுதுன்னும் தெரியாது. ஆனா, அரிசி, உளுந்து ஊற வைக்கும்போது அதுல ஒரே ஒரு பொருளை சேர்த்தா போதும், இட்லி பஞ்சு மாதிரி சாஃப்ட்டா வரும். அந்த சாஃப்ட் இட்லி எப்படி செய்றதுன்னு இப்ப பார்க்கலாம் வாங்க.
34
சாஃப்ட் இடலியும் முன்னேற்பாடும்

மூணு கப் ரேஷன் அரிசி, ஒரு கப் உளுந்து, கொஞ்சம் வெந்தயம், நாலு கப் தண்ணி. இது எல்லாத்தையும் ஒரு பாத்திரத்துல போட்டு, நாலஞ்சு தடவை நல்லா தண்ணி ஊத்தி கழுவணும். அப்புறம் தண்ணி ஊத்தி 5 மணி நேரம் ஊற வைக்கணும். ஊற வச்ச இந்த பொருட்களை, இட்லி மாவு பதத்துக்கு கொஞ்சம் கொரகொரப்பா அரைச்சு எடுத்துக்கணும். இட்லி மாவில் சிறிதளவு வெந்தயம் சேர்ப்பது இட்லியை மென்மையாகவும் பஞ்சு போலவும் மாற்ற உதவும். 4–5 கப் அரிசிக்கு சுமார் 1 டீஸ்பூன் வெந்தயம் போதுமானது. வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து மாவுடன் சேர்த்து, மாவை நன்றாக புளிக்க வைத்து இட்லி சுட்டால் சாப்ட், பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும்.

44
இட்லி 10 தின்பேன்.! சட்னி தொட்டு தின்பேன்

இதுல தேவையான அளவு உப்பு சேர்த்து, காத்து போகாத மாதிரி நல்லா மூடி வெச்சிடுங்க. ராத்திரி முழுக்க அப்படியே விட்டா, காலைல மாவு நல்லா புளிச்சு உப்பி வந்திருக்கும். இதுல இட்லி செஞ்சா ரொம்ப சாஃப்ட்டா, பஞ்சு மாதிரி வரும். அவ்வளவுதான், இந்த மாவுல இட்லி சுட்டு அசத்துங்க.

இட்லி மென்மையாக வர என்ன சேர்க்கலாம்?

  1. வெந்தயம் – 4 கப் அரிசிக்கு 1 டீஸ்பூன். மாவு நன்றாக புளிக்கவும், இட்லி மென்மையாகவும் உதவும். அவல் – ½ முதல் 1 கப் வரை சேர்த்தால் இட்லி பஞ்சு போல மென்மையாக இருக்கும்.
  2. ஜவ்வரிசி – 2–3 டேபிள்ஸ்பூன் சேர்த்தாலும் இட்லி சாஃப்டாக வரும். சாதம் – அரைக்கும் போது ½–1 கப் வடித்த சாதம் சேர்ப்பது இட்லியை மென்மையாக்கும்.
  3. உளுந்து – நல்ல தரமான உளுந்தை போதுமான நேரம் ஊறவைத்து, நன்றாகப் பொங்கி வரும் வரை அரைப்பது மிகவும் முக்கியம்.
  4. சமையல் சோடா – மாவு புளிக்காத நேரங்களில் மட்டும் மிகச் சிறிதளவு பயன்படுத்தலாம்; அதிகமாக சேர்த்தால் சுவையும் நிறமும் மாறலாம்.

சாஃப்ட் இட்லிக்கான நல்ல காம்பினேஷன்

4 கப் இட்லி அரிசி + 1 கப் உளுந்து + 1 டீஸ்பூன் வெந்தயம் + ½ கப் அவல் என்ற முறையில் செய்து பாருங்கள். மாவை சரியாக அரைத்து, போதுமான நேரம் புளிக்க வைத்தால் மிகவும் மென்மையான இட்லி கிடைக்கும்.

முக்கிய ரகசியம்: மாவில் தண்ணீர் அளவு சரியாக இருப்பதும், மாவு நன்றாக புளிப்பதும் தான் சாஃப்ட் இட்லிக்கு மிக முக்கியம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories