Bald Men and Fertility : வழுக்கை உள்ள ஆண்களுக்கு 'கருவுறுதல்' பிரச்சனை வருமா? சும்மா சொல்லல.. உண்மை இதுதான்!

Published : Sep 26, 2025, 04:09 PM IST

ஆண்களுக்கு வழுக்கைத் தலை ஏற்படுவது கருவுறுதல் பிரச்சனை ஏற்படுவதற்கான அறிகுறியா? ஆய்வுகளில் வந்த தகவல், நிபுணர்களின் விளக்கம் குறித்து காணலாம்.

PREV
16

சில ஆண்களுக்கு பதின்பருவங்களின் பிற்பகுதியில் அல்லது இருபதுகளின் முற்பகுதியில் முடி கொட்டத் தொடங்கிவிடும். இதனால் நாளடைவில் வழுக்கை ஏற்படலாம். ஆண்களுக்கு ஏற்படும் இந்த வழுக்கைக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஹார்மோன்கள் சமநிலையின்மையும் உண்டு. அண்மையில் ஆண்களின் வழுக்கைக்கும் (Male pattern baldness (MPB)), கருவுறுதல் உட்பட உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இடையில் உள்ள தொடர்பை குறித்து ஆய்வு செய்தது.

26

ஆண்களுக்கு சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன், டைஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோன் ஆகியவை முடி வளர்ச்சியை பாதிக்கக் கூடியவை. இவை இனப்பெருக்க செயல்முறையிலும் முக்கிய பங்காற்றுகின்றன. சில ஆய்வுகளில் வழுக்கைத் தலை உடையவர்களுக்கும், அவர்களின் விந்தணு தரத்திற்கும் இடையேயான தொடர்புகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் அவை முழுவதையும் விளக்கவில்லை.

36

அதிக டைஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோன் சுரக்கும் ஆண்களுக்கு, டெஸ்டோஸ்டிரோன் அதிகம் சுரக்காவிட்டாலும் முடி உதிர்தல் அதிகம் இருக்கும். ஆரம்பகால வழுக்கை இருக்கும் ஆண்களுக்கு ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அளவுகள் கொஞ்சம் அதிகம் இருக்கும்.

46

ஆண்ட்ரோலஜியா என்ற இதழில் வெளியான ஆய்வில், மிதமான முதல் கடுமையான ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா (AGA) (வழுக்கைத் தலை) இருக்கும் ஆண்களுக்கும், ஆரம்பகால முதல் முதல் லேசான ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா (ஆரம்பகால வழுக்கை) உள்ளவர்களுக்கும் இடையே உள்ள விந்துவின் தரம் ஒப்பிட்டது. இதில் ஆரம்பகால வழுக்கை உடையவர்களைவிட கடுமையான முடி உதிர்தலுடன் வழுக்கையானவர்களுக்கு விந்துவின் தரம் மோசமாக இருந்தது. இந்த ஆய்வு முடிவுகளில் வழுக்கைக்கும் விந்து தரத்திற்கும் இடையே உள்ள சாத்தியமான தொடர்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

56

இப்படி ஹார்மோன்களின் சமநிலையற்ற நிலை விந்தணு எண்ணிக்கையை அல்லது இயக்கத்தைப் பாதிக்கக் கூடும் என சில ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளன. இந்த ஹார்மோன்களில் தெரியும் வேறுபாடுகள் மிகவும் பொதுவாக நுட்பமானவை என்பதை மறக்கக் கூடடாது. இது முழுமையாக கருவுறுதல் பிரச்சனைகளை உண்டாக்கும் என நிரூபிக்கப்படவில்லை. ஆனால் விந்துவின் தரம் குறைவது தெரியவந்துள்ளது.

66

ஆனால் முடி ஆரோக்கியம், இனப்பெருக்க ஆரோக்கியம் ஆகிய இரண்டுமே டெஸ்டோஸ்டிரோன், டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்களால் பாதிக்கப்படுகிறது என்பதே உண்மை. இதைத் தடுக்க உடற்பயிற்சி, ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு, மன அழுத்தத்தை நிர்வகித்தல் ஆகிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இது ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவும். இதனால் முடி உதிர்தல், கருவுறுதல் பிரச்சனை இரண்டையும் சரிசெய்யலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories