ஆப்பிள் பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றாகும். ஆப்பிளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் தினமும் ஒரு பழம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆப்பிள் பழத்தை வாங்குவதில் ஒரு சிக்கல் என்னவென்றால் அது சீக்கிரமாகவே கெட்டுப் போய்விடும். ஆனால் ஆப்பிளை சரியான முறையில் சேமித்தால் அதை நீண்ட நாட்கள் பிரெஷாக வைத்திருக்கலாம். இந்த பதிவில் ஆப்பிள் பழத்தை பல வாரங்கள் ஆனாலும் கெட்டுப்போகாமல் பிரஷாகவும், சுவையாகவும் வைக்க அதை சேமிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
25
சரியான வெப்பநிலை
ஃப்ரிட்ஜில் ஆப்பிள் பழத்தை வைக்கும் போது அதிக குளிர்ச்சி இருக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அதிக குளிர்ச்சி பழங்களை சீக்கிரமாகவே சேதப்படுத்திவிடும் மற்றும் கெட்டுப் போவதையும் துரிதப்படுத்தும். எனவே, ஆப்பிள் பழத்தை ஃப்ரிட்ஜில் சரியான முறையில் சேமித்து வைத்தால் பல வாரங்கள் ஆனாலும் ப்ரெஷாக இருக்கும்.
35
துணியில் சுற்றி தனியாக வை :
ஆப்பிள் பழத்தின் தோல் ரொம்பவே மென்மையானது. எனவே அதில் சிராய்ப்பு ஏற்பட்டால் சீக்கிரமாகவே கெட்டுப் போய்விடும். ஆகவே, ஒவ்வொரு ஆப்பிள் பழத்தையும் சற்று ஈரமான காகித பேப்பர் துணியில் சுற்றி வைத்தால் ஈரப்பதம் இழப்பு ஏற்படாது மற்றும் சிராப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும்.
ஆப்பிள் பழத்தை பிரெஷாக வைத்திருக்க காற்று ரொம்ப முக்கியம். இதற்கு ஆப்பிளை பிளாஸ்டிக் பைகளில் சேமிக்காமல் துளைகள் இருக்கும் பைகளில் வையுங்கள். இது ஈரப்பதத்தை அதிகமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், அழுகிப்போவதைத் தடுக்கும். துளைகள் இருக்கும் பைகள் இருக்குமென்றால், பிளாஸ்டிக் பைகளில் சின்ன துளைகள் போட்டு பயன்படுத்துங்கள்.
55
மற்ற பழங்களுடன் வைக்காதே!
வாழைப்பழம், பேரிக்காய் போன்ற பிற பழங்களுடன் ஆப்பிள் பழத்தை வைத்தால் சீக்கிரமாகவே கெட்டுவிடும். எனவே ஆப்பிள் பழத்தை எப்போதுமே தனியாக தான் சேமிக்க வேண்டும். இதனால் மற்ற பழங்களின் ஆயுளும் நீடிக்கும் ஆப்பிளும் நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும்.