உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங்க் (Zinc) எனப்படும் துத்தநாகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பல உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவை மற்றும் வாசனையை நாம் சரியாக உணர இது அவசியம். இளம் குழந்தைகள், பதின்வயதினர், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்பட சிலருக்கு துத்தநாகக் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, துத்தநாகம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி வகை செய்கிறது.
சணல் விதைகள்:
சணல் விதைகள் ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். இதில் நிறைவுறா கொழுப்புகள் மற்றும் துத்தநாகம் காணப்படுகின்றன. சுமார் 3 டேபிள்ஸ்பூன் சணல் விதைகளில் 3 மி.கி வரை துத்தநாகம் உள்ளது. இந்த விதைகள் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. மேலும் பசியை நமது கட்டுப்பாட்டில் வைக்கும். இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது.
பூசணி விதைகள் :
விதைகள் உங்கள் உணவில் ஆரோக்கியமான ஒன்றாகும். பூசணி விதைகள் எண்ணற்ற துத்தநாகம், நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2.2 மி.கி அளவு துத்தநாக சத்து நிறைந்துள்ளது. எனவே, பூசணி விதைகள் நிறைந்த உணவை உட்கொள்வது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. எனவே, துத்தநாக குறைபாடு இருப்பவர்கள் நாள்தோறும் ஒரு கைப்பிடி அளவு பூசணி விதைகள் எடுத்து கொள்ளலாம்.
nuts
நட்ஸ்:
பைன் நட்ஸ், வேர்க்கடலை, முந்திரி மற்றும் பாதாம் போன்றவை சாப்பிடுவது உடலில் துத்தநாகத்தின் அளவை அதிகரிக்கும். இதில் கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து, அத்துடன் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கின்றன.
துத்தநாகம் அதிகம் உட்கொள்ள விரும்பினால் முந்திரி ஒரு நல்ல தேர்வாகும்.1-அவுன்ஸ் (28-கிராம்) சேவையில் 15% DV (17) உள்ளது. நட்ஸ் சாப்பிடுவது இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற சில நோய்களுக்கான ஆபத்து காரணிகளை குறைக்கும் தன்மை கொண்டது.