உங்கள் கவரிங் நகைகள் தங்கம் போல் ஜொலிக்க வேண்டுமா? 1 ரூபாய் செலவு வேண்டாம்..வீட்டிலேயே இருக்கு சூப்பர் பொருள்

Published : Jul 29, 2022, 12:07 PM ISTUpdated : Jul 29, 2022, 06:00 PM IST

Gold Covering: கறுத்துப் போன கோல்ட் கவரிங் நகைகளை நாம் வீட்டிலேயே 1 ரூபாய் கூட செலவு செய்யாமல், மிக சுலபமான முறையில் புத்தம் புதிய நகை போல பளிச்சிட வைக்கலாம்? அவை எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

PREV
16
உங்கள் கவரிங் நகைகள் தங்கம் போல் ஜொலிக்க வேண்டுமா?  1 ரூபாய் செலவு வேண்டாம்..வீட்டிலேயே இருக்கு சூப்பர் பொருள்
gold-covering

பொருளாதார நெருக்கடியில், தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன தான் நாம் ஆசை ஆசையாய்  கோல்டு கவரிங் செயின்கள், வளையல்கள் இவைகளை நாம் பயன்படுத்தினாலும், சில நாட்களிலேயே கருத்து போக ஆரம்பித்துவிடும். சில பேருக்கு சூட்டு உடம்பு என்றால், கோல்டு கவரிங் நகைகள் உடனே கருத்து போகும். 
இப்படி காசு கொடுத்து வாங்கிய கோல்ட் கவரிங் நகைகளை கருத்து போனாலும், தூக்கிப் போட தேவையில்லை. அதை நாம் வீட்டிலேயே 1 ரூபாய் கூட செலவு செய்யாமல், மிக சுலபமான முறையில் புத்தம் புதிய நகை போல பளிச்சிட வைக்கலாம்? அவை எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

26
jewellery Shop

முதலில் கிண்ணியில், ஒரு பெரிய எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் இருக்கும் சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் கறுத்து போன நகையை அந்த எலுமிச்சை சாற்றில் 30 நிமிடம் நன்கு ஊற வையுங்கள். டிசைன் உள்ள நகையாக இருந்தால் உங்கள் விரல்களால், எல்லா இடங்களிலும் எலுமிச்சை சாறு படும்படி அலசிவிடுங்கள். 15 நிமிடம் நன்கு ஊறிய பிறகு நகைகளில் இருக்கும் அழுக்குகள், தூசுகள் அனைத்தும் எலுமிச்சை சாற்றில் இறங்கிவிடும்.

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: இன்று குருவின் வக்ர பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு அற்புதமான காலம்..

36
gold-covering

அதன் பிறகு வேறு ஒரு பாத்திரத்தை எடுத்து, மீதமுள்ள எலுமிச்சை சாறை வடிகட்டி சேருங்கள். பின்னர் நகையை போட்டு 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் அடுப்பை பற்ற வைத்து . ஐந்து நிமிடம் லேசாக கொதிக்க விட வேண்டும். எலுமிச்சை சாறு கலந்த இந்த தண்ணீரில் கறுத்துப் போன நகைகளை போட்டு சூடேற்றம் செய்யும் பொழுது மீதம் இருக்கும் அழுக்குகளும் முழுமையாக நீங்கிவிடும்.

46
gold-covering

இறுதியாக நகையை மட்டும் தனியாக எடுத்து கொஞ்சம் போல நீங்கள் பல் துலக்க பயன்படுத்தும் பழைய டூத் பிரஷ் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஏதாவது ஒரு பிராண்ட் பேஸ்ட் பயன்படுத்தி நகை முழுவதையும் நன்கு அழுத்தம் கொடுத்து தேயுங்கள். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீரை தொட்டுக் கொண்டு நன்கு நுரை வர தேய்த்து கொடுங்கள்.

.மேலும் படிக்க....Guru Peyarchi 2022: இன்று குருவின் வக்ர பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு அற்புதமான காலம்..

56
tooth paste

அதன் பின்பு ஒரு துண்டினால் அந்த பவுடரையும் துடைத்து எடுத்து விட வேண்டும். பவுடரைப் போட்டு அப்படியே அப்பி விடக்கூடாது. இப்பொழுது 99 சதவீதம் எல்லா அழுக்குகளும் நீங்கி நல்ல பளிச்சன உங்களுடைய நகை புத்தம் புதியதாக மின்னும்

66

இதன் பிறகு சிறிதளவு மஞ்சள் பொடியை அந்த நகை முழுவதும் தேய்த்துக் கொடுங்கள். பிறகு ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் ஒரு முறை நல்ல தண்ணீரில் போட்டு அலசி நகையை எடுத்து கொள்ளுங்கள். பின்னர், சுத்தமான காட்டன் துணியை பயன்படுத்தி நன்கு துடைத்துக் கொள்ளுங்கள். ஈரப்பதம் இருக்கக்கூடாது. எனவே, இது போல செய்தால் உங்கள் வீட்டிலும் பழைய கோல்ட் கவரிங் செயின் அல்லது தங்க நகையாக இருந்தாலும் சரி, ரொம்பவே பளிச்சுன்னு புத்தம் புதுசு போல மின்னும்.

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: இன்று குருவின் வக்ர பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு அற்புதமான காலம்..

click me!

Recommended Stories