பாகற்காயில் இருக்கும், கசப்பு சுவை கருதி பெரும்பாலானோர், தங்கள் உணவில் சேர்த்து கொள்வதில்லை, ஆனால் இதில் பல்வேறு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. ஆம் இவற்றில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது.