ஜோதிடத்தின் படி, தேவகுரு வியாழன் அல்லது குரு பகவான் செல்வம், பெருமை, திருமண வாழ்க்கை, குழந்தைகள் மற்றும் கல்வி போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் வியாழன் வலுவாக இருந்தால், ஒரு நபர் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுகிறார். அதனபடி, ஜூலை 29 முதல் வியாழன் தன் சொந்த ராசியான மீனத்தில் வக்ரமாகப்போகிறார். வியாழன் கிரகத்தின் பிற்போக்கு நிலை அதன் தலைகீழ் இயக்கத்தைக் குறிக்கிறது. தேவகுரு பிருஹஸ்பதி அடுத்த ஐந்து மாதங்களுக்கு தனது சொந்த ராசியான மீனத்தில் பிற்போக்குத்தனமாகச் செல்வார். இதன் தாக்கம் 12 ரசிகளிலும் இருக்கும். குரு பகவான் பெயர்ச்சி சில ராசிக்காரர்கள் அடுத்த ஐந்து மாதங்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிகழும் குரு பகவானின் வக்ர நிலை சுப பலன்களை தரும். வருமானம் கூடும். செல்வம் பெருகும், வசதிகள் அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு இருந்த காரியம் கைகூடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சொந்த வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
34
Guru Peyarchi 2022 Palangal
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு வியாழனின் பிற்போக்கு கட்டத்தில் சிறப்பு பலன் உண்டாகும். பண வரவு அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருமானம் கூடும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும், திடீர் பதவி உயர்வும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு சுப செய்தி காதில் விழும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நேரம் உங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்வில் புது ஒளி பிறக்கும்.