Watermelon Facial: பொலிவிழந்த உங்கள் சருமத்தை தேவதை போல் ஜொலிக்க வைக்கும்....இயற்கையான அசத்தல் டிப்ஸ்

Published : Jul 29, 2022, 07:02 AM IST

Watermelon Facial at Home: இயற்கையான முறையில் வீட்டிலேயே ஃபேஷியல் தயார் செய்ய, வாட்டர்மெலன் மிக சிறந்த ஒன்றாகும்.

PREV
15
Watermelon Facial: பொலிவிழந்த உங்கள் சருமத்தை தேவதை போல் ஜொலிக்க வைக்கும்....இயற்கையான அசத்தல் டிப்ஸ்
Watermelon Facial

அழகான, பளபளப்பான மற்றும் மென்மையான சருமத்தை பெற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இதற்காக நாம் பல்வேறு வகையான பொருட்களை பயன்படுத்துகிறோம். இதனுடன் பல வித அழகு சாதனங்களையும் கிரீம்களையும் பலரும் பயன்படுத்துகிறார்கள். என்னதான் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி தற்காலிகமான அழகை பெற்றாலும் இயற்கையான முறையில் கிடைக்கின்ற அழகுதான் நிரந்தரமாக இருக்கும். எனவே, நமக்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை வைத்து எப்படி நமது முகத்தை அழகாக பராமரித்துக்கொள்ள முடியும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

மேலும் படிக்க..தினமும் 1 கப் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் 5 பெஸ்ட் நன்மைகள்...கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

25
Watermelon Facial

பொதுவாக கோடை காலங்களில் ஒரு துண்டு தர்பூசணியை சாப்பிட்டாலே  உடலுக்கு இதமாகவும், தாகத்தை தீர்க்கவும் அது உதவும். அதே தர்பூசணியை கொண்டு நீங்கள் வீட்டிலேயே உங்கள் முகத்திற்கு தேவையான ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கலாம். இது உங்கள் முகத்திற்கு கூடுதல் பொலிவை அளிக்கும். வீட்டிலேயே எப்படி ஃபேஷியல் செய்வது என்பதை இங்கே காணலாம்.

35
Watermelon Facial

தேவையான பொருட்கள்:

தர்பூசணி சாறு - இரண்டு டீஸ்புன் 

தேன் - ஒரு  டீஸ்புன் 

தயிர் - ஒரு  டீஸ்புன் 

கற்றாழை ஜெல் - தேவையான அளவு 


மேலும் படிக்க..உங்கள் வீட்டில் எலி தொல்லையா..? இந்த ஒரு பால் போதும்...மூலை முடுக்கெல்லாம் ஒளிந்துள்ள எலியை தேடி தேடி கொல்லும்

45
Watermelon Facial

செய்முறை விளக்கம்:

1. முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து தர்பூசணி சாறு,தேன் மற்றும் தயிர் மூன்றையும் சேர்த்து கிரீம்‌‌ போல ஆகும் வரை கலந்துக் கொள்ளவும். 

2. பின்னர், அதனை உங்கள் சருமத்தில் பூசி 15 லிருந்து 20 நிமிடம் வரை காத்திருக்கவும். பின் சாதாரண நீரில் உங்கள் முகங்களை கழுவிவிட்டு பாருங்கள் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.  

3. அடுத்த கணமே அந்த மேஜிக்கை உணர்வீர்கள் இரண்டு துண்டு தர்பூசணியை ஒரு பவுலில் போட்டு கையால் பிசையவும். பின் வெள்ளரிக்காய் சாறு ஒரு டேபிள் ஸ்பூனும் முல்தானி மெட்டி ஒரு டேபிள் ஸ்பூனும் சேர்த்து பேஸ்ட் போல ஆகும் வரை மிக்ஸ் செய்யவும். ஃபேஸ்வாஷ் அல்லது சோப்களை தவிர்த்து விடுங்கள்.

55
Watermelon Facial

4. இல்லையென்றால், தர்பூசணி சாறுடன், கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலக்குங்கள். பின் உங்கள் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் வரை காத்திருங்கள்.பின்னர், குளிர்ந்த நீரில் கழுவி விட்டு பாருங்கள். 

5. தர்பூசணியில் இருக்கும்  ஊட்டச்சத்துக்கள் உங்கள் சருமத்தை இரட்டிப்பு பொலிவாக்க உதவும். அதேபோல் இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு நாட்கள் உபயோகிப்பது சிறந்த தீர்வாக இருக்கும். 

மேலும் படிக்க..தினமும் 1 கப் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் 5 பெஸ்ட் நன்மைகள்...கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

Read more Photos on
click me!

Recommended Stories