Temple: பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ள தமிழக சதுரங்க வல்லபநாதர் கோவில்...சிறப்பு என்ன..? முழு விவரம் உள்ளே..

First Published | Jul 29, 2022, 11:05 AM IST

Chaturanga Vallabhanadhar Temple: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி,தமிழகத்தில் உள்ள சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில் செஸ் விளையாட்டுடன் தொடர்புடையது என்று தெரிவித்துள்ளார். 

Chaturanga Vallabhanadhar Temple:

மாமல்லபுரத்தில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று துவங்கி நடைபெற்றது. ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த போட்டிக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதன் தொடக்க விழாவில் நேற்று பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில் செஸ் விளையாட்டுடன் தொடர்புடையது என்றும் அதன் வரலாறு குறித்தும் சுட்டி காட்டினார்.

Chaturanga Vallabhanadhar Temple:

இதன் வரலாற்று சிறப்பு பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சதுரங்க வல்லப நாதர் கோயில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவனூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் செஸ் விளையாட்டுடன் தொடர்புடையது. இக்கோயிலின் முதன்மைக் கடவுள் சதுரங்க வல்லபநாதர், சிவபெருமான் ஆவார். இவர் செஸ் அல்லது சதுரங்கத்தில் வல்லுனர் என்று அழைக்கப்படுகிறார். 

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: இன்று குருவின் வக்ர பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு அற்புதமான காலம்..

Tap to resize

Chaturanga Vallabhanadhar Temple:

பார்வதியின் அவதாரத்தைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை சதுரங்கம் விளையாடி பெற்றதால் சிவபெருமான் சதுரங்க வல்லபநாதர் என்று அழைக்கப்பட்டார் என்று கூறுகிறது. 

Chaturanga Vallabhanadhar Temple:

புராணத்தின் படி, வசுசேனன் என்ற மன்னருக்கு மகளாக தோன்றினார் அம்பிகை . தன் மகள் சதுரங்கத்தில் மேதையாக இருந்ததால், தன் மகளை விளையாட்டில் தோற்கடிப்பவருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக அரசன் வசுசேனன் அறிவித்திருந்தான். அவளை யாராலும் வெல்ல முடியாததால், கவலைப்பட்ட ஒரு அரசன் சிவபெருமானிடம் வேண்டினான்.

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: இன்று குருவின் வக்ர பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு அற்புதமான காலம்..

Chaturanga Vallabhanadhar Temple:

இதனால், சிவபெருமான், சித்தர் வேடத்தில் வந்து தான்தான் சதுரங்க விளையாட்டில் சிறந்தவன் என்று கூறினார். இதையடுத்து, சிவனும்- அம்பிகையும் சதுரங்கம் விளையாடுகிறார்கள். இதில் சிவபெருமான் வெற்றி பெறுகிறார். பின்னர், பார்வதி தேவியை திருமணம் செய்து கொள்ள சிவபெருமான் தான் மாறுவேடத்தில் வந்ததாக கூறப்படுகிறது. 

Chaturanga Vallabhanadhar Temple:

இந்த கோயிலில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி என்ற இரண்டு தாயாருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. இது கோயிலில் இருக்கும் மற்றொரு மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால் இங்கே சாமுண்டீஸ்வரி சன்னதி உள்ளது. இந்த கோயிலில் மட்டும்தான், மைசூருக்கு அடுத்து சாமுண்டீஸ்வரி அம்மன் உட்கார்ந்து நிலையில் காட்சி தருகிறது.

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: இன்று குருவின் வக்ர பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு அற்புதமான காலம்..

Latest Videos

click me!