ரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா?

First Published Oct 14, 2020, 7:42 PM IST

ஆபீஸ் கிளம்பும் கணவன் - மனைவி, மற்றும் அவசர அவசரமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போதும், பலருக்கும் ரொம்ப ஈஸியா செய்யப்படும் கலவை சாதங்கள் தான் கை கொடுக்கும்.
 

தயிர் சாதம், லெமன் சாதங்களை காட்டிலும் புளி சாதம் செய்வது கொஞ்சம் வேலை அதிகம் என்பது போல் தோன்றலாம்.
undefined
ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ரொம்ப டேஸ்டியா புளிக்காய்ச்சல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க... ஒரு வாரம் ஆனால் கூட கெடாமல் இருக்கும் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
undefined
தேவையான பொருட்கள்:காய்ந்த மிளகாய் - 15வெந்தயம் - 1 ஸ்பூன்புளி - எலுமிச்சை பழ அளவுகடலை பருப்பு - 3 ஸ்பூன்வேர்க்கடலை - 50 கிராம்மஞ்சள் தூள் - 1 2 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகடுகு உளுத்தம் பருத்து - தாளிப்புக்குநல்லெண்ணெய் - 50 கிராம்பெருங்காயம் - 2 சிட்டிகை
undefined
செய்முறை :முதலில் ஒரு கடாயில் இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு, அதில் வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய்யை நன்கு வறுத்து கொள்ளுங்கள். அது ஆறிய பின் பொடி செய்து வைத்து கொள்ளுங்கள்.இதன் பின்னர், மீண்டும் கடையில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்து வந்த பின், கடலை பருப்பு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் புளிக்கரைசலை அதில் ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு கறிவேப்பில்லை போன்றவற்றை சேர்த்து கொதித்து வந்த பின்னர், புளியின் பச்சை வாடை போனதும், அதில் நீங்கள் அரைத்து வைத்திருக்கும் வெந்தயம் - காய்ந்த மிளகாய் கலவையை சேர்த்து கொதிக்க விடுங்கள்.
undefined
அந்த கலவை நன்கு கொதித்த பின்னர், 50 கிராம் அளவு நல்லெண்ணெய் சேர்த்து, கடைசியாக இரண்டு சிட்டிகை பெருங்காய தூள் சேர்த்து இறக்கினால், காமகமைக்கும் புளி காய்ச்சல் தயார்.
undefined
சாதம் நன்கு ஆறிய பின்னர் இந்த கலவையில் உங்களுக்கு தேவையான அளவு, போட்டு கிளறி கொள்ளலாம். கை படமால் ஒரு டப்பாவில் போட்டு நீங்கள் வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். சில சமயங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சூடு படுத்தி வைப்பது சிறந்தது.
undefined
click me!