எளிமையான முறையில் கமகமக்கும் இட்லி சாம்பார்..! ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க...!

First Published Oct 11, 2020, 8:18 PM IST

பொதுவாக இட்லி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருமே இட்லி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. துளியும் எண்ணெய் இல்லாமல் இட்லி ஆவியில் வேக வைக்கப்படுவதால், அணைத்து வயதினருக்கும் எளிதில் செரிமானம் ஆகிவிடும். 
 

உடல் நல குறைவு ஏற்பட்டால் கூட, மருத்துவர்கள் சாப்பிட சொல்லுவது கஞ்சி, இட்லி போன்ற உணவுகளை தான். இவ்வளவு ஏன் பலரது வீட்டிலும் காலை உணவு சுட சுட இட்லி தான்.
undefined
இட்லிக்கு பல வகை சட்னி இருந்தாலும்.. கமகமக்கும் இட்லி சாம்பார் இருந்தால், 4 இட்லி சாப்பிடுபவர்கள் கூட 6 இட்லி அசால்டாக சாப்பிடுவார்கள்.
undefined
சரி நம்ப வீட்டிலேயே அதுவம் 15 நிமிடத்தில் எப்படி இட்லி சாம்பார் வைக்கலாம் என பார்க்கலாம் வாங்க.
undefined
தேவையான பொருட்கள்...துவரம் பருப்பு - 1 கப்பச்சை பருப்பு - 1 2 கப்வெங்காயம் - 2தக்காளி - 2பச்சை மிளகாய் - 4கத்தரிக்காய் - 2கேரட் - 1பீன்ஸ் - 5மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - தேவையான அளவுஎண்ணெய் - தேவையான அளவுகடுகு உளுத்தம்பருப்பு தேவையான அளவு உப்பு - தேவையான அளவுகருவேப்பில்லை கொத்தமல்லிபெருங்காயம் - சிறிதளவு
undefined
செய்முறை:முதலில் அடுப்பை பற்ற வைத்து, குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு பொரிந்து வந்த பின், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கி கொள்ளுங்கள். பின்னர், நறுக்கி வைத்திருக்கும் அணைத்து காய்களையும் அதனுடன் சேர்த்து, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் துவரம் பருப்பு, பச்சை பயிரை குக்கரில் போட்டு 4 டம்பளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து விடுங்கள்.
undefined
3 அல்லது 4 விசில் வந்த பின், குக்கரில் உள்ள சாம்பாரில் கடுகு உளுத்தம்பருப்பு மற்றும் கருக்கப்பிள்ளை போட்டு தாளித்து ஊற்றி, சிறிதளவு பெருங்காயம் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கி சாப்பிட்டு பாருங்கள். டெய்லி செய்துகொண்டே இருப்பீங்க அப்படி இருக்கும் டேஸ்ட்.
undefined
click me!