ஒரு கப் தேங்காய் பாலில் இத்தனை நன்மைகளா?... இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே...!

First Published Sep 21, 2020, 9:23 PM IST

“பிள்ளையை பெத்தால் கண்ணீரு தென்னையை பெத்தால் இளநீரு” என்று ஒரு பழமொழி நம்மிடையே வழக்கமான ஒன்று. தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தேங்காயில் எண்ணற்ற சத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதிலும் தேங்காய் பாலில் என்ன மாதிரியான நன்மைகள் இருக்கிறது என பார்க்கலாம் வாங்க... 

பலரும் தேங்காய் பால் அருந்துவதால் உடல் எடை கூடும் என்றும் நினைக்கின்றனர். அது தவறு, விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பாலை விட தேங்காய் பாலில் கொழுப்பு சத்து குறைவு. ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
undefined
வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் இரும்பு சத்து கிடைக்கிறது.
undefined
தேங்காய் பால் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
undefined
செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது. தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும்.
undefined
அடிக்கடி தேங்காய் பால் குடித்து வருபவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தோலில் சுருக்கங்கள் ஏற்படாது. தோலில் உள்ள பளபளப்பு கூடி வயதான போதும் இளமையான தோற்றமே நீடிக்க வழி செய்யும்.
undefined
தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.
undefined
click me!