இந்த ஒரு ஜூஸ்சில் இவ்வளவு நன்மையா?

First Published Sep 20, 2020, 7:09 PM IST

ஊரடங்கு உத்தரவுகள் தகர்க்கப்பட்டாலும், இன்னும் கொரோனாவின் தாக்கம் குறைத்த பாடு இல்லை. ஒவ்வொரு நாளும் கொரோனவை எதிர்த்து போராடவேண்டிய சூழல் தான் நிலவி வருகிறது. இந்த சமயத்தில், நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டியது உடல் ஆரோக்கியத்தில் தான். 
 

நோய் எதிர்ப்பு சக்தி, இந்த சூழலில் நம் உடலுக்கு அதிகம் தேவை. அந்த வகையில் உடலை உறுதி படுத்தி, உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியத்தை தர கூடிய சில ஜூஸ் வகைகள் பற்றி தான் இன்று பார்க்க போகிறோம்.
undefined
ஆப்பிள் , கேரட் , பீட்ரூட் ஆகிய ஜூஸ் தனித்தனியாக குடிப்பதை விட, இந்த மூன்றையும் ஒன்று சேர்ந்து, ஜூஸாக பருகலாம். இவை நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி புத்துணர்ச்சியடைய வைக்கிறது.
undefined
குறிப்பாக நுரையீரல், சிறுநீரகம் என ஒவ்வொரு உறுப்புகளிலும் உள்ள நச்சுகளை வெளியேற்றி உடலை சுத்திகரிக்கிறது.
undefined
இதனால் உடல் ஹெல்தியாகவும், சருமம் பளபளப்பாகவும் இருக்கும். அதோடு நோய் எதிர்ப்பு சக்திக்கு அதிகமாகும்.
undefined
பீட்ரூட்டில் பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச் சத்து, மாங்கனீஸ், ஆம்டி ஆக்ஸிடண்ட் என பல நன்மைகளை கொண்டுள்ளது.
undefined
அதேபோல் இது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற உதவுகிறது. நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் இதற்க்கு முக்கிய பங்கு உண்டு.
undefined
ஆப்பிள் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது பலருக்குமே தெரிந்தது. இதில் வைட்டமின் A, B1, B2, B6, ஸிங்க், பொட்டாசியம் என பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
undefined
கேரட் A, B1, B2, B3 அடங்கியது. அதோடு கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் , செலினியம் என பல நன்மைகளை உள்ளடக்கியது. நார்ச்சத்து மிக்கது.
undefined
எனவே இந்த மூன்றையும் அப்படியே அரைத்து அதோடு 5 புதினா இலைகள், இஞ்சி சில துண்டுகள், தேவையான அளவு தண்ணீர் சேர்ந்து வடிகட்டி தினமும் காலை குடித்து வாருங்கள். நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்க்க முடியும்.
undefined
click me!