எலும்புகளை உறுதியாக்கும் முக்கிய உணவு வகைகள்..!

First Published Sep 17, 2020, 7:50 PM IST

ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் பலமே எலும்புகள்தான். அதை எந்த அளவிற்கு உறுதியாக வைத்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு முதுமையிலும் அவர்கள் துடிப்புடன் வேலைகளை செய்ய முடியும்.
 

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்வதில், நாம் எடுத்து கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமானவை. ஒருவேளை நீங்கள் எலும்புகள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் விட்டால் எலும்புப் புரை, எலும்புத் தேய்மானம், போன்ற பல எலும்பு சார்ந்த பிரச்னைகளை சந்திக்க கூடும்.
undefined
சரி எலும்பை பல படுத்தும் உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க..
undefined
எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்வதில் கால்சியத்திற்கு தான் முதல் பங்கு வகிக்கிறது. இதுதான் எலும்புகளின் உறுதிக்கு உதவக்கூடியது. அதேபோல் உங்கள் உடல் கால்சியம் சத்தை தானாக உற்பத்தி செய்யாது. உணவுகளை மட்டுமே நம்பியிருப்பதால் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். பால், முட்டை, அதிகம் எடுத்து கொள்ளுங்க.
undefined
காய்கறிகளில் புரக்கோலி, கீரை வகைகள், முட்டை கோஸ் போன்றவற்றில் அதிக கால்சியம் சத்துக்கள் உள்ளது.
undefined
ஓட்ஸ், சோயா, பாதாம் போன்ற உணவு பொருட்களிலும் கால்சியம் நிறைந்துள்ளதால் அதிகம் எடுத்து கொள்ளுங்கள்.
undefined
வைட்டமின் டி சூரிய ஒளியினால் நமக்கு கிடைக்கும் ஒருவகை வைட்டமின். இது உங்களுடைய எலும்புகளை திடப்படுத்தும். எனவே காலை சூரியக்கதிர் உடலில் பட வாக்கிங் செய்வது உங்கள் உடலுக்கு நல்லது.
undefined
சூரிய ஒளி அல்லாமல் காளான், முட்டை மஞ்சள் கரு, மீன், சோயா பால் போன்றவை வைட்டமின் டி சத்து கிடைக்க ஏதுவான உணவுகள்.
undefined
வைட்டமின் சி எலும்புகளைப் பாதுகாக்க உதவும் கொலாஜின் அடுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இது சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை போன்ற புளிப்பு சுவை கொண்ட பழங்களில் உள்ளது எனவே வாரத்திற்கு இரு முறையாவது இது போன்ற பழங்களை எடுத்து கொள்வது அவசியம்.
undefined
வைட்டமின் கே எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்யும். குறிப்பாக தேய்ந்த, பாதிக்கப்பட்ட, உடைந்த எலும்புகளை விரைவில் சரி செய்ய வைட்டமின் கே உதவுகிறது. எனவே கோஸ், காலிஃப்ளவர், துளசி, கொத்தமல்லி, அடிக்கடி எடுத்து கொள்ளுங்கள்.
undefined
மெக்னீசியம்: சமீப காலமாக, அதிக பெண்கள் குறிப்பாக 30 வயதை கடந்த பலர் இந்த மெக்னிசியம் குறைபாடால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் பச்சை காய், கறிகள், பூசணி விதை, மற்றும் வாழை பழம் தினமும் எடுத்து கொள்வது சிறந்தது.
undefined
புரதசத்து: எலும்புகள் தேய்மானத்தை தடுக்க அனைவரின் உடலுக்கும் மிகவும் முக்கிய புரதம். எனவே முடிந்தவரை அதிக புரதசத்து நிறைந்த முட்டை, பால், ஓட்ஸ், சீஸ் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
undefined
பாஸ்பரஸ் : எலும்புகளின் கால்சியத்தை அதிகரிக்க உதவுவது பாஸ்பரஸ் தான், இவை இறைச்சி, மீன், பால், அவகடோ, திராட்சை, அத்திப்பழம் , போன்ற்வற்றில் உள்ளது.
undefined
முடிந்தவரை தினமும் ஏதேனும் ஒரு பழத்தை உண்பதை வாடிக்கையாக வைத்து கொள்ளுங்கள். வரும் முன் காப்பது நலம் அல்லவா...
undefined
click me!