நம் பாட்டியின் அஞ்சறை பெட்டியில் இடம் பிடித்த, ஓமம் எனும் ஒரு பொருள் இன்று பலரது வீட்டில் உள்ளதா? என்பதே சந்தேகம் தான்.
உடல் செரிமாணத்திற்காக, சில தின்பண்டங்களில் சேர்க்கப்படும் இந்த ஓமம் உங்கள் உடல் எடையை குறைக்க வல்லது.
மேலும் நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், செரிமான பிரச்சனை இருந்தால் கூட, ஓமத்தை சிறிதளவு தண்ணீரில் கொதிக்க வைத்து பருகினால் இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
ஓமம் உடல் எடையை கூட குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
தினமும் காலையில் டீ - காபி போன்றவற்றை குடிப்பவர்கள் வாரத்தில் இரு முறையாவது இந்த ஓமம் டீயை குடித்து பாருங்கள்.
சிறிதளவு ஓமத்தை இரவு தூங்க செல்வதற்கு முன் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். பின் அந்த நீரை வடிகட்டி எடுத்து, கொதிக்க வைத்து, அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு, புதினா, மற்றும் தேன் கலந்து குடித்து பாருங்கள்.
உடல் எடை குறைவதுடன் புத்துணர்வாகவும் உணர்வீர்கள்.