நவகிரகங்களில் தலைவனாக இருக்கும், சூரியன் மாதத்திற்கு ஒருமுறை தன்னுடைய இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. எனவே சூரியனின் இடமாற்றம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தை மாதம் 1-ஆம் தேதி, அதாவது பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் சூரியன் சஞ்சாரத்தால், மூன்று ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகின்றன.