நிலத்தின் தெய்வமான இந்திரனுக்கும், சூரியனுக்கும், விவசாயத்திற்கு பேர் உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை அன்று, மக்கள் அறுவடை செய்த புதிய பச்சரிசியை கொண்டு, புது பானையில் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, மஞ்சள், விபூதி, குங்குமம், சந்தனம், போன்ற மங்களகரமான பொருட்களை பூசி பொட்டு வைத்து... பானையில் பசும் பால் ஊற்றி, அரிசி, வெல்லம் போட்ட தித்திக்கும் பொங்கலை செய்து சூரியனுக்கு படையல் வைத்து நன்றி செலுத்துவார்கள்.
நகரங்களை விட கிராமங்களில் பொங்கல் திருவிழா, சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் அன்று குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். அதே போல், இளைஞர்கள் பாரம்பரியத்தை மறக்காமல், மஞ்சுவிரட்டு, உறியடித்தல், ஜல்லிக்கட்டு, வழுமரம் இருத்தல் போன்ற வீர வீர விளையாட்டில் ஈடுபடுவார்கள்.
கிழக்கு:
கிழக்கு திசையில் பொங்கல் பொங்குவது மிகவும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. கிழக்கு திசையில் பொங்கல் பொங்கினாள் வீடு வாங்கும் யோகம் உள்ளது. பூர்வீக சொத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவை முடிவுக்கு வரும். என்று நம்பப்படுகிறது.
Specialty of Pongal Festival
வடக்கு
வடக்கு திசையில் பொங்கல் பொங்கினால், அந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு பணவரவு நல்லபடியாக இருக்கும். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிட்டும். உங்கள் குடும்பத்தில் படித்து முடித்த பெண்கள் மற்றும் ஆண்கள் இருந்தால், அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடன் சிக்கல் இன்றி சந்தோஷமாக இருப்பீர்கள்.
தெற்கு:
மேலே கூறப்பட்ட மூன்று திசைகளில் பொங்கல் பொங்கினால் நல்லது. ஆனால் தெற்கு திசையில் பொங்கல் பொங்குவது அவ்வளவு சிறந்தது இல்லை. இந்த திசையில் பொங்கல் பொங்கினால் அந்த ஆண்டு முழுவதும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். எப்போதும் ஏதேனும் ஒரு சோர்வு மற்றும் சோம்பேறித்தனம் உங்களை ஆட்கொள்வது போல் உணர்வீர்கள். திருமண பேச்சுகள் தள்ளிப் போகலாம்... அடிக்கடி உடல் உபாதைகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.