துளசி
துளசியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்களுக்காக நீண்ட காலமாக இந்தியாவில் ஒரு புனிதமான தாவரமாக கருதப்படுகிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. துளசி இரத்தத்தை சுத்தப்படுத்தவும், சுவாச தொற்றுகளை எதிர்த்து போராடவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். துளசி தேநீர் குடிப்பது அல்லது புதிய துளசி இலைகளை மென்று சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முருங்கை
முருங்கை கீரையில் நம்பமுடியாத ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் சி, ஏ மற்றும் இரும்புச்சத்து நிறைந்த முருங்கை இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. முருங்கைக் கீரை பொறியல் அல்லது முருங்கை கீரை சாம்பார் அல்லது முருங்கை கீரையை பொடியாக செய்து கூட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ நிரம்பியுள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதன் மூலம் நோயெதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை உள்ளன, அவை உடலுக்கு ஊட்டமளிக்க உதவுகின்றன. தினமும் ஒரு கையளவு பாதாம் பருப்பை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.