பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை
ஒரு பெண் தனது குழந்தையுடன் தனியாகப் பயணம் செய்தால், எந்த சூழ்நிலையிலும் இரவில் அவரை ரயிலில் இருந்து இறக்கிவிடக் கூடாது. பாதுகாப்பு நிலையத்தில் உள்ள பாதுகாப்புப் பணியாளர் அல்லது ரயில்வே ஊழியர்களிடம் அவரை ஒப்படைக்கப்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இந்திய ரயில்வே இதை ஒரு கடுமையான விதியாக அமல்படுத்தியுள்ளது.
ரயிலைத் தவறவிட்டீர்களா?
நிர்ணயிக்கப்பட்ட நிலையத்தில் ரயிலில் ஏற முடியவில்லையா? கவலைப்படாதீர்கள். அடுத்த இரண்டு நிலையங்களில் இருந்து அதே ரயிலில் ஏறலாம். பீதியடைவதற்கு பதிலாக, புத்திசாலித்தனமாக உங்களது ரயில் நிலையத்திலிருந்து உடனடியாக வேறு வாகனம், கார் அல்லது பைக்கை எடுத்துக்கொண்டு அடுத்த நிலையத்தை அடைந்து ரயிலைப் பிடிக்கலாம்.
லக்கேஜ் வரம்பு
ஒருவர் எடுத்துச் செல்லக்கூடிய பொருட்களின் அளவு குறித்து இந்திய ரயில்வே ஒரு குறிப்பிட்ட விதியைக் அறிவித்துள்ளது. இந்த விதியின்படி, ஒரு நபர் ரயிலில் 70 கிலோவுக்கு மேல் எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது. இருப்பினும், தற்போது, மக்கள் தலா நான்கு பைகளை எடுத்துச் செல்கிறார்கள். இது உண்மையில் இந்திய ரயில்வே விதிமுறைகளுக்கு எதிரானது. ரயில்வே ஊழியர்கள் உங்களுக்கு அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. எனவே, ரயிலில் பயணம் செய்யும் போது தேவையற்ற பொருட்களை எடுத்துச் செல்லாமல் இருப்பது நல்லது.
மிடில் பர்த் விதி தெரியுமா?
இந்திய ரயில்வே மிடில் பர்த்துக்கென தனி விதியை அறிவித்துள்ளது. மிடில் பர்த் என்பது படுத்துச் செல்லக் கூடிய பயணிகளின் ரயிலில் நடுவில் இருக்கும் பர்த். இந்த பர்த்தில் டிக்கெட் முன் பதிவு செய்து இருந்தாலும், இரவும் பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை தான் தூங்க வேண்டும். பயணிகள் உட்காருவதற்கு இடம் கேட்டால் கொடுத்துதான் ஆக வேண்டும். இதற்கு விதிவிலக்கும் உண்டு. மிடில் பர்த்தில் பதிவு செய்து இருக்கும் பயணிகள் வயதானவர்கள் அல்லது ஊனமுற்றவர்களாக இருந்தால், அவர்களை நடுவில் இருக்கும் பர்த்தில் படுக்க வேண்டாம் என்று கட்டாயப்படுத்த முடியாது என்று இந்திய ரயில்வே விதி கூறுகிறது.
ஒலிபெருக்கி பயன்பாடு
இந்திய ரயில்வேயில் இன்னொரு முக்கியமான விதி இருக்கிறது. ஸ்பீக்கரைப் பயன்படுத்தி பாடல்களைக் கேட்கவோ அல்லது தொலைபேசியில் பேசவோ கூடாது. இரவு 10 மணிக்கு மேல் சத்தமாக ஆடியோ அல்லது வீடியோவை இயக்குவது மற்ற பயணிகளுக்கு இடையூறை விளைவிக்கும் என்பதால் இந்த விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பயணம் செய்யும் போது யாராவது இப்படி உங்களை தொந்தரவு செய்தால், நீங்கள் அவர்களை எச்சரிக்கலாம் அல்லது டிடிஇயின் உதவியை நாடலாம்.
அதிகமாக கட்டணம்
நிலையத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் MRP-ஐ விட அதிகமாக கட்டணம் வசூலிக்கக் கூடாது. இவ்வாறு செய்வது நியாயமற்றது எனக் கருதப்படுகிறது. ரயில்வே அதிகாரிகளும் அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். எனவே, நீங்கள் இதுபோன்ற சூழ்நிலையை சந்தித்தால், உடனடியாக ரயில்வே ஊழியர்களிடம் புகார் அளிக்கலாம்.